பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகும் காவியா – இவருக்கு பதில் இனி இவர் தான்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகும் காவியா - இவருக்கு பதில் இனி இவர் தான்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகும் காவியா - இவருக்கு பதில் இனி இவர் தான்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகும் காவியா – இவருக்கு பதில் இனி இவர் தான்!

முல்லைக்கு இந்த வாரத்திலிருந்து செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை தொடங்க உள்ளது. இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவியா பட வாய்ப்பின் காரணமாக சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லைக்கு செயற்கைமுறை கருவுறுதல் சிகிச்சை வெற்றியை கொடுக்குமா அல்லது தோல்வியுற்று மீண்டும் முதலில் இருந்து சிகிச்சையை செய்யப் போகிறார்களா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள சிகிச்சை எடுத்துக் கொள்ளப் போகிறார்.

Exams Daily Mobile App Download

ஆனால் செயற்கை முறை கருவுறுதலுக்கு குறைந்தது 5 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர் கூறுகிறார். எப்படியோ மூர்த்தியும் ஜீவாவும் சேர்ந்து 5 லட்சத்தை ரெடி செய்கிறார்கள். இந்த வாரத்திலிருந்து முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சையை தொடங்க இருக்கிறார்கள். ஆனால், இந்த செயற்கை கருவுறுதல் சிகிச்சை நிச்சயமாக வெற்றியை கொடுக்குமா என்று கூற முடியாது. ஒருவேளை தோல்வி அடைந்துவிட்டால் மீண்டும் முதலில் இருந்து சிகிச்சையை தொடங்க வேண்டும்.

திடீரென மரணத்தை தழுவும் ராமமூர்த்தி தாத்தா – நிம்மதியில் கோபி! அதிரடி திருப்பத்துடன் பாக்கியலட்சுமி!

இந்த ஐந்து லட்சத்தை ரெடி செய்யவே குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். மீண்டும் ஐந்து லட்சத்தை கட்ட சொன்னால் என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்தினர்கள் பயத்தில் உள்ளனர். இந்த வாரத்தில் முல்லைக்கு சிகிச்சை தொடங்கியிருக்கும் நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவியா பட வாய்ப்பின் காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார் இவருக்குப் பதிலாக ராஜா ராணி தொடரில் நடித்து வந்த ஆலியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!