‘மாஸ்டர்’ பட நடிகருடன் நடிக்கவிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை – வைரலாகும் தகவல்!
சின்னத்திரையில் முல்லையாக என்ட்ரி கொடுத்து ஆதரவை பெற்று, பல விமர்சனங்களுக்கு மத்தியில் தனது நடிப்பால் முன்னேறி வெள்ளித்திரையில் பல படங்களில் கமிட் ஆகி இருக்கும் காவியா அறிவுமணி ‘மாஸ்டர்’ பட நடிகருடன் நடிக்கவுள்ள தகவல் படு வேகமாக பரவி வருகிறது.
காவியா அறிவுமணி:
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் காவியா அறிவுமணி. அதில் முக்கிய ரோலில் நடித்து வாலிப ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். அதன் பிறகு மிக பெரிய ப்ரோஜெக்டாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ரோல் வாய்ப்பு கிடைத்தது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா மறைவுக்கு பிறகு அந்த வாய்ப்பு காவியாவை தேடி வந்தது.
தமிழகத்தில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் அறிவிப்பு!
ஆரம்பத்தில் பார்வையாளர்கள் முல்லையாக காவியாவை ஏற்று கொள்ளாமல் போதிலும் தொடர்ந்து அதிக விமர்சங்களை பெற்று வந்தார். நாளடைவில் காவியாவுக்கு அவரது நடிப்பால் மக்களிடத்தில் ஆதரவும், தன்னைக்கென ரசிகர் கூட்டங்களையும் குவித்தார். தற்போது அவரது நடிப்பால் வெள்ளித்திரையில் நடிப்பதற்கான பட வாய்ப்புகளும் காவியாவை தேடி வந்துள்ளது.
ஆம், தற்போது சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக மக்களிடத்தில் பிரபலமாகிய பிக் பாஸ் கவின் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக காவ்யா நடித்து வருகிறார். அதுமட்மின்றி மாஸ்டர் பட நடிகர் மஹேந்திரன் நடித்து வரும் புதிய படத்திலும் காவ்யா கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவ்வாறு வெள்ளித்திரையில் வாய்ப்பை பெற்று நடித்து வரும் காவியா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலக போவதாகவும், அவருக்கு பதிலாக ஆலியா நாடிக்கவுள்ளதாகவும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.