விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – “காற்றுக்கென்ன வேலி” ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

0
விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் -
விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் - "காற்றுக்கென்ன வேலி" ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – “காற்றுக்கென்ன வேலி” ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

விஜய் டிவி “காற்றுக்கென்ன வேலி” சீரியலில் நடிகர், நடிகைகள் மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய மாற்றத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காற்றுக்கென்ன வேலி:

விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் TRPயில் போட்டி போட்டுக்கொண்டு பல முன்னணி சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ப்ரைம் டைம் சீரியல்களை தவிர மற்ற சீரியல்களும் மக்கள் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது. அந்த வகையில் அருமையான கதைக்களம் கொண்ட காற்றுக்கென்ன வேலி சீரியலில் பல கதை திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஹீரோயின் எப்படியாவது படித்து விட வேண்டும் என்ற முனைப்போடு தன்னுடைய கல்விக்கு ஏற்படும் தடைகளை உடைத்து வருவதையே கதைக்களமாக அமைத்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அபிநய்? வெளியான வோட்டிங் ரிப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இதனால் இளைஞர்கள் மத்தியில் இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் சமீபத்தில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த தர்ஷன் விலகியதால் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீரியல் குழுவில் செய்த மாற்றங்களே சீரியலில் இருந்து தர்ஷன் விலகியதற்கான காரணமாக அமைந்தது. அதன் பின் சுவாமிநாதன் என்ற கன்னட நடிகர் தற்போது நடித்து வருகிறார். மேலும் அம்மா கேரக்டரில் பன்முகக் கலைஞர் மாளவிகா அவினாஷ் நடித்து வந்தார். அவரும் சீரியலில் இருந்து மாற்றப்பட்டார்.

மீனா அறையில் கண்ணன், ஐஸ்வர்யாவை தங்க வைக்கும் தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

தொடர்ந்து மாற்றங்கள் காரணமாக சீரியல் பார்க்கும் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாற்றம் அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதாவது இந்த சீரியல் மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ராஜபார்வை சீரியலுக்கு பதிலாக, காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து மாற்றம் அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இருந்தாலும் சீரியல் பார்க்கும் ஆர்வம் குறையாமல் இருப்பது சீரியலின் கூடுதல் சிறப்பு.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!