ரூ.30,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

1
தமிழக அரசு வேலைவாய்ப்பு
தமிழக அரசு வேலைவாய்ப்பு

ரூ.30,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

கரூர்‌ மாவட்டம்‌ சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ கீழ்‌ மூலம்‌ சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில்‌ (050) தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில்‌ பணிபுரிய தகுதியான நபர்கள்‌ தங்களது சுய விபரங்களை தட்டச்சு செய்து 07.02.2022 பிற்பகல்‌ 5.45மணிக்கு மாவட்ட சமூகநல அலுவலர்‌, மாவட்ட சமூகநல அலுவலகம்‌, மாவட்ட ஆட்சியர்‌ வளாகம்‌, கரூர்‌ மாவட்டம்‌ என்னும்‌ முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
வயது வரம்பு:

அனைத்து பதவிகளுக்கும்‌ வயது வரம்பு 21 முதல்‌ 40 வயது வரை விண்ணப்பங்கள்‌ வரவேற்க்கப்படுகின்றன. இப்பதவிக்கான மாதிரி விண்ணப்பம்‌ கரூர்‌ மாவட்ட இணையதளத்தில்‌  https://karur.nic.in என்ற இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து விண்ணப்பிக்கலாம்‌.

பதவி 1 – மையநிர்வாகி- 1 (Centre Administrator)
 • மையநிர்வாகி பதவிக்கு விண்ணப்பிக்க கரூர்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌,
 • முதுநிலை சமூகபணி, சட்டப்படிப்பு, உளவியல்‌, வளர்ச்சிப்பணிகள்‌, சமூகவியல்‌ ஆகிய ஏதேனும்‌ ஒன்றில்‌ முதுநிலைபட்டதாரி பெண்‌ விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
 • அரசு, அரசு சாரா தொண்டு நிறுவனங்களில்‌ 5 ஆண்டுகள்பணிஅனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.
 • பெண்கள்‌ மட்மே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர்‌. மாத ஊதியம்‌ ரூ.30,000/- (ரூபாய்‌ முப்பதாயிரம்‌ மட்டும்‌) வழங்கப்படும்‌.
பதவி 2- வழக்குகையாளுபவர்‌ – 4 (Case Worker)
 • வழக்குகையாளுபவர்‌ பதவிக்கு விண்ணப்பிக்க கரூர்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்தவராக இருத்தல்‌வேண்டும்‌, முதுநிலை சமூகபணி, சட்டப்படிப்பு, உளவியல்‌, வளர்ச்சிப்பணிகள்‌, சமூகவியல்‌ ஆகிய ஏதேனும்‌ ஒன்றில்‌ முதுநிலை பட்டதாரி/ பட்டதாரி பெண்‌ விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.
 • அரசு, அரசுசாரா தொண்டு நிறுவனங்களில்‌ 3 ஆண்டுகள்‌ பணி அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.
 • பெண்கள்‌ மட்மே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர்‌.
 • மாத ஊதியம்‌ ரூ.15,000/- (ரூபாய்‌ பதினைந்தாயிரம்‌ மட்டும்‌) வழங்கப்படும்‌.
பதவி 3- காவலர்‌ மற்றும்‌ ஒட்டுநர்‌ – 2 (Security Guard / Driver)
 • காவலர்‌ மற்றும்‌ ஒட்டுநர்‌ பதவிக்கு விண்ணப்பிக்க கரூர்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌, ஆண்‌ நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.
 • பாதுகாப்புபணியில்‌ முன்‌ அனுபவமும்‌ ஒட்டுநர்‌ பணியில்‌ முன்‌ அனுபவமும்‌ மற்றும்‌ ஒட்டுநர்‌ உரிமம்‌ உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌.
 • மாத ஊதியம்‌ ரூ.10,000/- (ரூபாய்‌ பத்தாயிரம்‌ மட்டும்‌) வழங்கப்படும்‌.
பதவி 4- பல்நோக்கு உதவியாளர்‌ – 1 (Multi- purpose Helper)
 • பல்நோக்கு உதவியாளர்‌ பதவிக்கு விண்ணப்பிக்க கரூர்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌.
 • சமையல்‌, வீட்டு வேலை நன்றாக தெரிந்திருக்க வேண்டும்‌. பெண்கள்‌ மட்மே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர்‌.
 • மாத ஊதியம்‌ ரூ.6,400/- (ரூபாய்‌ ஆறாயிரத்து நானூறுமட்டும்‌) வழங்கப்படும்‌.

Download Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!