S.S.L.C தேர்ச்சி பெற்றவரா? ரூ. 65500/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு !

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு
தமிழக அரசு வேலைவாய்ப்பு

S.S.L.C தேர்ச்சி பெற்றவரா? ரூ. 65500/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு !

கரூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணியில் காலியாகவுள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பதவிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்சமயம் வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை 30.06.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பதவிக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் திறமையானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

தமிழக அரசு வேலைகளில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள்மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு நீதித்துறை
பதவி சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III
காலியிடங்கள் 08
கல்வித்தகுதி 10th
சம்பளம் மாதம் ரூ.20600 முதல் ரூ. 65500 /- வரை 
வயது வரம்பு 37 வயது
பணியிடம் கரூர்
விண்ணப்பிக்கும் முறை தபால்
கடைசி தேதி 30.06.2022
வயது வரம்பு:

01.07.2022 அன்று தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்பக் கல்வித் தகுதி:
  1. தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் முதுநிலை (அல்லது)
  2. தமிழ் தட்டச்சு தேர்வில் முதுநிலை மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் இளநிலை (அல்லது)
  3. தமிழ் தட்டச்சு தேர்வில் இளநிலை மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் முதுநிலை மற்றும்
  4. தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் முதுநிலை (அல்லது)
  5. தமிழ் சுருக்கெழுத்து தேர்வில் முதுநிலை மற்றும் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் இளநிலை (அல்லது)
  6. தமிழ் சுருக்கெழுத்து தேர்வில் இளநிலை மற்றும் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் முதுநிலை
தேர்வு செயல் முறை:

சான்றிதழ்கள் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதி தேர்வுக்கு இந்நீதிமன்ற இணையத வலைதளத்தின் மூலம் அழைக்கப்படுவோர் மட்டும் நேரில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

விண்ணப்பங்கள் (ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு சுயசான்றொப்பத்துடன்) தற்போது பணிபுரியும் விவரங்களுடனும் (ஏதும் இருப்பின்) அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும் கலப்புத் திருமணம் மற்றும் பிற) மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்கள் உரிய சுய சான்றொப்பத்துடனும் கீழ்காணும் முகவரிக்கு ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத தபாலில் 30.06.2022 தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

மாவட்ட நீதிபதி,
மாவட்ட நீதிமன்றம்,
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
தாந்தோன்றிமலை,
கரூர் 639 007

Download Notification 2022 Pdf

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!