11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி, +2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0
11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி, +2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி, +2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி, +2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் மே மாதம் 24 ஆம் தேதி நடைபெற இருந்த இரண்டாம் ஆண்டு PUC (+2 பொதுத்தேர்வு) மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தேர்வுகள் ஒத்திவைப்பு:

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க பல கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. மேலும் நிலைமையை சரி செய்ய அம்மாநிலம் முழுவதும் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

மேலும் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இரண்டாம் ஆண்டு PUC மாணவர்களுக்கான தேர்வுகள் மே மாதம் 24 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக திட்டமிடப்பட்டது. இந்த அசாதாரண சூழ்நிலையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நேரடியாக நடத்தினால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுகள் ஒத்திவைப்பு? தேர்வர்கள் கோரிக்கை!!

எனவே இந்த தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது இந்த தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ஏற்கனவே 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது பிரிட்ஜ் கோர்ஸ் பாடங்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here