இரவு நேர ஊரடங்கு உத்தரவு ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!

0
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான தடை உத்தரவு ரத்து- மாநில அரசு அறிவிப்பு
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான தடை உத்தரவு ரத்து- மாநில அரசு அறிவிப்பு
இரவு நேர ஊரடங்கு உத்தரவு ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!

கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட இரவு ஊரடங்கை ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டம்:

கொரோனா நோய் அச்சம் காரணமாக மக்கள் பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்தால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். தற்போது புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகைகள் நெருங்கி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் கொண்டாட்டத்திற்கு கூடுவார்கள். ஏற்கனவே உருமாறிய கொரோனா இங்கிலாந்தில் பரவி வருவதால் அந்நாட்டில் இருந்து பெங்களூரு வந்த 138 பேர் பரிசோதனை செய்யாமல் வீடு திரும்பினர். இந்நிலையில் புத்தாண்டு கொண்ட்டத்திற்கு அனுமதித்தால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் டிசம்பர் 23ம் தேதியான நேற்று இரவு முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என கர்நாடக அரசு தெரிவித்திருந்தது.

முதலில் அம்மாநில முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 23 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில் நேற்று காலை வெளியிட்ட அறிவிப்பில் காலை 5 மணி வரை ஊரடங்கு எனத் தெரிவித்தார். இதனால் பிற மாநில வாகனங்கள் அந்த நேரத்தில் கர்நாடகாவிற்குள் வர முடியாது என்பதோடு உள்ளூர்களிலும் வாகன இயக்கம் இருக்காது என கூறப்பட்டது.

சுயதொழில் செய்ய மாணவர்களுக்கு கடன் உதவி – மாநில முதல்வர் அறிக்கை!!!

இதனால் பொதுப்போக்குவரத்து துறை அமைச்சர் லட்சுமண் சவதி வெளியிட்ட அறிவிப்பில், இரவு நேர ஊரடங்கு காலகட்டத்திலும், பெங்களூர், கர்நாடக அரசு பஸ்கள், டாக்சி மற்றும் ஆட்டோக்களும் இயங்கலாம் என அறிவித்தார். இவ்வாறு மாற்றி மாற்றி அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அனைத்தும் இயங்குவது ஊரடங்கா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

ஜனவரி 4 முதல் கல்லூரிகள் திறப்பு- மாநில அரசு அறிவிப்பு!

தற்போது கர்நாடக அரசு இரவு ஊரடங்கு பற்றி வெளியிட்ட உத்தரவை ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இவ்வாறு நேரத்தை மாற்றி, நாட்களை மாற்றி ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டபடி இருக்கிறது எடியூரப்பா அரசு என்று மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!