கல்லூரிகளுக்கு நாளை (ஜூன் 20ம் தேதி) விடுமுறை – மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!

0
கல்லூரிகளுக்கு நாளை (ஜூன் 20ம் தேதி) விடுமுறை - மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!
கல்லூரிகளுக்கு நாளை (ஜூன் 20ம் தேதி) விடுமுறை - மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!
கல்லூரிகளுக்கு நாளை (ஜூன் 20ம் தேதி) விடுமுறை – மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி நாளை மைசூரு மற்றும் பெங்களூரு வழியே சுற்றுப்பயணம் செல்ல இருப்பதால் பாதுகாப்பு காரணமாக அந்த பகுதியில் இருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு விடுமுறை

நாளை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் 450 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மூளை செல் ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைக்க ஒரு சுற்று பயணமாக வருகிறார். மேலும், பெங்களூரில் மைண்ட் ட்ரீயால் கட்டப்பட்டு வரும் 850 படுக்கை வசதி கொண்ட ஆராய்ச்சி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இது மட்டுமல்லாமல் நகரின் மையப் பகுதியிலிருந்து புறநகரில் உள்ள சில பகுதிகளுக்கு வெகுஜனப் போக்குவரத்து இணைப்பிறகான திட்டத்தையும் தொடங்கவுள்ளார்.

TCS, Infosys, HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – Hybrid Model எப்படி வேலை செய்யும்? முழு விவரம்!

மேலும், நாளை பெங்களூருக்கான புறநகர் ரயில் திட்டமும் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, 6 ரயில்வே திட்டங்களையும் நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். மேலும், துமகுரு சாலையில் உள்ள தாபஸ்பேட்டையை ஹோசகோட்டுக்கு அருகே பழைய மெட்ராஸ் சாலையுடன் இணைக்கும் சாட்டிலைட் டவுன் ரிங் ரோடுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதனால் பாதுகாப்பு காரணமாக மோடி பயணம் செய்யும் பாதையில் அமைந்துள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, பிரதமர் நரேந்திர மோடி ஐஐஎஸ்சி, கோரகுண்டேபாளையம், சிஎம்டிஐ, ரிங்ரோடு, டாக்டர் ராஜ்குமார் மெமோரியல் மேம்பாலம், லாகரே பாலம், நாயண்டஹள்ளி, மைசூர் சாலை ஆர்.வி. கல்லூரி, நாகரபாவி, சுமனஹள்ளி மேம்பாலம், எம்இஐ சந்திப்பு, கோவர்தன் டாக்கீஸ், யஷவந்தபுரா ஆகிய பகுதிகளை கடந்து செல்ல இருப்பதால் இந்த இடங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் சி.என்.அஸ்வத் நாராயண் அறிவித்துள்ளார்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here