ஏப்ரல் 24 முதல் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

0
ஏப்ரல் 24 முதல் முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!!
ஏப்ரல் 24 முதல் முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!!
ஏப்ரல் 24 முதல் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டு தலங்கள் மற்றும் திரையரங்குகள் போன்றவை மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் ஊரடங்கு:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணிவரை இரவு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

திங்கள் கிழமை காலை 6 மணி முதல் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை பால், காய்கறி, மற்றும் இறைச்சி கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – அரசு வெளியீடு!!

ஊரடங்கு காலத்தில் வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், வணிக வளாகங்கள், மதுபான விடுதிகள், இயங்க தடை அமலில் இருக்கும். மேலும் ஊரடங்கு காலத்தில் விளையாட்டு போட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மே மாதம் 4 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here