” யுவா- பிரீத்தி கல்யாணம்” ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் – கண்ணான கண்ணே கல்யாண வைபோகம் !

1
கண்ணான கண்ணே கல்யாண வைபோகம்
கண்ணான கண்ணே கல்யாண வைபோகம்

” யுவா- பிரீத்தி கல்யாணம்” ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் – கண்ணான கண்ணே கல்யாண வைபோகம் !

சீரியல் என்றாலே என்றும் முதலிடத்தில் இருப்பது சன் டிவி தான். எத்தனையோ சேனல்களும் சீரியல்களும் வந்தாலும் என்றும் மக்கள் மனதில் மட்டும் அல்லாமால் டி ஆர் பியாலும் முதலில் இருப்பது சன் தொலைக்காட்சி தான். அதில் பல்வேறு சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகளின் ஏக்கத்தை கூறும் கண்ணான கண்ணே சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

யுவா-மீரா காதல்:

இந்த சீரியலில் நிமிஷிகா, ராகுல் ரவி, பப்லு பிரித்விராஜ், நித்யா தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சீரியலின் கதாநாயகி ஆன மீரா, எப்போது தான் தனது அப்பாவின் பாசம் கிடைக்கும் என்று ஏங்கி வருகிறாள். ஆனால் அவள் அப்பாவோ என்றும் அவளை தன் மகளாக ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்நிலையில் காதநாயகனான யுவா மீராவை காதலிக்கிறார். மீராவும் யுவாவை காதலிப்பதாக ஒத்துக்கொண்டார். ஆனால், அவளோ தன் தந்தை மற்றும் தங்கைக்காக தனது காதலை தியாகம் செய்கிறாள். இந்த உண்மை தெரிந்த மீராவின் சித்தியாலும் அவர்கள் காதலுக்கு உதவ முடியாமல், மிகவும் வருத்தத்தில் உள்ளார்.

யுவா- பிரீத்தி கல்யாணம்:

தற்போது ப்ரீத்தி மற்றும் யுவாவின் திருமணத்திற்கான பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிகழ்வை மேலும் ஸ்வரசியமாக்க இந்த குழு முடிவு செய்து, தாலாட்டு சீரியலில் உள்ள பிரபலத்தை யுவா மற்றும் மீராவின் நண்பர்களாக அழைத்து மேலும் ரசியர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கண்ணான கண்ணே கல்யாண வைபோகம்:

பல்வேறு சேனல்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் கல்யாணத்தை வைபோகமாக நடத்தி வரும் வேளையில், இந்த சீரியல் பட குழுவினரும் யுவா- பிரீத்தி கல்யாணத்தை ஒரு மணி நேர வைபோகமாக நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த வைபோகம் வரும் ஜூலை 11 அன்று மாலை 2 மணி முதல் ஒரு மணி நேர தொடராக வழங்க உள்ளது.

இதில் தான் யுவா யாரை திருமணம் செய்து கொள்வார் என்று தெரியும். எனவே, ரசிகர்கள் அனைவரும் இந்த புரோமோவில் தங்களின் எதிர்பார்ப்புகளை கமெண்ட் செய்து வருகின்றனர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here