யுவா-மீரா காதல் பற்றிய உண்மையை சொல்ல வரும் இசை – விறுவிறுப்பான கதைக்களத்தில் கண்ணான கண்ணே !

0
யுவா-மீரா காதல் பற்றிய உண்மையை சொல்ல வரும் இசை
யுவா-மீரா காதல் பற்றிய உண்மையை சொல்ல வரும் இசை

யுவா-மீரா காதல் பற்றிய உண்மையை சொல்ல வரும் இசை – விறுவிறுப்பான கதைக்களத்தில் கண்ணான கண்ணே !

சன் தொலைக்காட்சியில் அதிக எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் யுவா யாரை திருமணம் செய்து கொள்ளுவார் என்பது பற்றிய ஆவல் ரசிர்கள் மத்தியில் அதிகமாக எழுந்து வருகிறது.

யுவா – பிரீத்தி கல்யாணம்:

மகளை வெறுக்கும் அப்பா, அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகள் என பாச போராட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும், கண்ணான கண்ணே சீரியலில் தற்போது யுவா- பிரீத்தி கல்யாணம் நடைபெற உள்ளது. தாலாட்டு சீரியலின் பிரபலங்கள் இந்த சீரியலில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் யுவா-மீராவின் நண்பர்களாக கலந்து கொண்டு உள்ளனர்.

இந்த திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் மீராவின் மிரட்டலுக்காக ஒத்து கொள்ளும் யுவா. யுவாவை தன் அக்காவின் காதலன் என்றும் தெரிந்தும் விரும்பும் பிரீத்தி. தன் செல்ல மகள் மற்றும் தனக்கு பிடித்த மாப்பிள்ளையான யுவாவிற்கு திருமணம் செய்ய துடிக்கும் கெளதம். மீராவின் மனதிற்குள் இருக்கும் காதலை தெரிந்து கொள்ள விரும்பும் யமுனா. இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தி மீராவுக்கு கல்யாணம் செய்ய விரும்பும் வாசுகி.

இப்படி விறுவிறுப்பான கதைக்களத்தில் உள்ளது கண்ணான கண்ணே தொடர். இன்று வெளியான ப்ரோமோவில் அனைவரும் மெகந்தி விழாவில் நடனம் ஆடி உற்சாகத்தில் உள்ளனர். அதன் பின் தாலாட்டு தொடரின் நாயகி ஆன இசை, மீராவிடம் ” நீயும் யுவாவும் காதலிப்பதை யமுனா அம்மா” விடம் சொல்ல போவதாக கூறி விட்டு, செல்கிறார். இதனை தூரத்தில் இருந்து கேட்கும் பிரீத்தி அதிர்ச்சி அடைகிறார். மேலும் இந்த கல்யாணம் வைபோகம் வரும் ஜூலை 11 அன்று 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here