சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!

0
சன் டிவி 'கண்ணான கண்ணே' சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் - வெளியான ப்ரோமோ!
சன் டிவி 'கண்ணான கண்ணே' சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் - வெளியான ப்ரோமோ!
சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!

சன் தொலைக்காட்சியில் பெரும் ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் “கண்ணான கண்ணே” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

“கண்ணான கண்ணே” சீரியல்:

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் தற்போது பல பிரபலமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு சீரியல் என்றால், அது “கண்ணான கண்ணே” சீரியல் தான். தந்தையின் பாசத்தினை தனது சிறு வயதில் இருந்து அனுபவிக்காத நாயகி மீரா, அதற்காக மிகவும் ஏங்குகிறார். இப்படி இருக்க, அவருக்கு நாயகன் யுவாவின் மீது காதல் வந்து விடுகிறது. தனது தங்கைக்கு அவரை மாப்பிள்ளையாக பேசியதும், அவர் தனது காதலை மறந்து விடுகிறார்.

முத்துராசை கொலை செய்தது மஹாவும், கத்தியும்? அதிர்ச்சியில் மாயன் – இன்றைய எபிசோட்!

ஆனால், எதிர்பாராத விதமாக இறுதியில் மீரா மற்றும் யுவா இருவருக்கும் திருமணம் நடந்து விடுகிறது. மீராவின் அப்பா மற்றும் யுவாவின் அப்பா இருவருக்கும் இந்த திருமணம் பிடிக்காமல் போக, இரு குடும்பத்தினருக்கும் சண்டை வந்து விடுகிறது. யுவா மற்றும் மீரா இருவரையும் வீட்டை விட்டு வெளியே போகுமாறு யுவாவின் அப்பா கூறுகிறார். இப்படி விறுவிறுப்பான கட்டங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில் மீரா திருமணத்தன்று நடந்த அனைத்து விஷயங்களையும் தனது தந்தையிடம் கூறி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். மீராவின் அப்பா திருமணத்தன்று ஏதோ ஒரு விஷயம் நடந்ததால் தான் திருமணம் மாற்றி நடந்து விட்டது என்றும், தனது குடும்பத்தினர் தன்னிடம் எதோ ஒரு விஷயத்தினை மறைக்கின்றனர் என்றும் யோசித்து விஷம் அருந்தி விடுகிறார். அப்போது அவர் அறைக்கு வரும் மீரா, இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து, மற்றவர்களுக்கும் தெரிவித்து அவரை ஹாஸ்பிடல் அழைத்து செல்கின்றனர். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here