“மீராவின் கழுத்தில் தாலி கட்டும் யுவா” – எதிர்பாராத திருப்பங்களுடன் கண்ணான கண்ணே இன்றைய எபிசோட் !

0
எதிர்பாராத திருப்பங்களுடன் கண்ணான கண்ணே
எதிர்பாராத திருப்பங்களுடன் கண்ணான கண்ணே

“மீராவின் கழுத்தில் தாலி கட்டும் யுவா” – எதிர்பாராத திருப்பங்களுடன் கண்ணான கண்ணே இன்றைய எபிசோட் !

சன் தொலைக்காட்சியில் அதிக எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே தொடர். இந்த தொடரில் யுவா யாரை திருமணம் செய்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்து வருகிறது. இதற்கு பதிலுக்கும் விதமாக இன்றைய ப்ரோமோ வெளிவந்துள்ளது.

கண்ணான கண்ணே கல்யாண வைபோகம்:

சென்ற ஞாயிற்றுக்கிழமை இந்த தொடர் ஒரு மணி நேர ஸ்பெஷல் ஷோவாக ஒளிபரப்பானது. அனைவரும் அன்றே யுவா யாரை திருமணம் செய்து கொள்ளவார் என்பது பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் இன்னும் அது குறித்த எபிசோட் வரமால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இதுவரை யுவா, மீராவின் காதல் பற்றி தெரிந்த வாசுகி, யமுனா என அனைவரையும் மீரா யாரிடமும் இது பற்றி கூற கூடாது என்று சத்தியம் வாங்கி உள்ளார். அவர்கள் அனைவரும் இந்த திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் யுவா இந்த கல்யாணத்தை நிறுத்த இறுதி முடிவாக  பென்டிரைவ் ஒன்றை தனது தோழியிடம் குடுத்து திருமணம் நடக்கும் நேரத்தில் போட சொல்கிறார். அதன்படி, அவரும் அதை போட்டு விடுகிறார். இதோடு நேற்றைய எபிசோட் முடிவடைகிறது.

காய்ச்சலிலும் கண்ணம்மாவை பார்க்க அடம்பிடிக்கும் ஹேமா – பாரதியின் முடிவு என்ன ?

இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில், திருமண தாலியை அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்க மீரா எடுத்து செல்கிறாள். பின் தாலியை ஐயர் யுவாவிடம் கொடுக்கிறார். அப்போது பிரீத்திக்கு துணையாக இருக்கும் மீராவுக்கு கட்ட முயல்கிறார் யுவா. இதோடு ப்ரோமோ முடிவடைகிறது. இன்றைய எபிசோட்டில் தான் அந்த பென்டிரைவில் என்ன இருக்கும் என்பது பற்றிய தகவலும், உண்மையில் யுவா யாரை திருமணம் செய்தார் என்ற தகவலும் வெளியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here