“யமுனாவை சித்தி என்று கூறும் மீரா” – அதிர்ச்சியில் கண்ணான கண்ணே குடும்பத்தினர் !

0
"யமுனாவை சித்தி என்று கூறும் மீரா" - அதிர்ச்சியில் கண்ணான கண்ணே குடும்பத்தினர் !

“யமுனாவை சித்தி என்று கூறும் மீரா” – அதிர்ச்சியில் கண்ணான கண்ணே குடும்பத்தினர் !

கண்ணான கண்ணே சீரியலில் யுவா யாரை திருமணம் செய்து கொள்ளவார் என தெரியாமல் தினமும் பல்வேறு திருப்பங்களுடன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

கண்ணான கண்ணே இன்றைய எபிசோட்:

அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மீரா, தனது அப்பா மற்றும் தங்கைக்காக தனது காதலை விட்டுக் கொடுக்கிறார். யுவா-பிரீத்தி கல்யாணம் பல்வேறு ஏற்பாடுகளுடன் தடபுடலாக நடைபெற்று வருகிறது. இந்த திருமணத்தை நிறுத்தி, எப்படியாவது மீராவுக்கு கல்யாணம் செய்ய நினைத்து பிரீத்தியை கடத்த திட்டமிடுகிறார். ஆனால், அதில் இருந்தும் மீரா பிரீத்தியை காப்பாற்றி மண்டபத்திற்கு அழைத்து வந்து விடுகிறார்.

கண்ணம்மாவை பிரிய முடியாமல் காய்ச்சல் வந்து தவிக்கும் ஹேமா – பாரதியின் முடிவு என்ன?

இதை அறிந்த வாசுகி மற்றும் யுவாவின் அம்மா என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் உள்ளனர். இதற்கிடையில் மீராவின் அம்மா ஆன யமுனாவிற்கு யுவா-மீராவின் காதல் பற்றிய உண்மை தெரிந்து விடுகிறது. அவர் கோவத்தில் மீராவை அடித்து விடுகிறார். மேலும் அவர் இதை உன் அப்பாவிடம் சொல்லி இந்த இத்திருமணத்தை நிறுத்த போவதாக கூறி, மீராவையும் அழைத்து செல்கிறார்.

இந்நிலையில் இன்றைய எபிசோடில், வாசுகி, யுவாவின் அம்மா, யமுமான மற்றும் மீரா அனைவரும் பேசி கொண்டு உள்ளனர். அப்போது மீரா யுவா காதல் பற்றிய உண்மையை யாரிடமும் சொல்ல கூடாது என்று தனது அம்மாவிடம் கூறுகிறார். ஆனால் அவரோ தான் கண்டிப்பாக சொல்வேன் என்று அங்கிருந்து செல்கிறார். அப்போது மீரா யாரும் எதிர்பாராத விதமாக “யமுனாவை சித்தி” என்று கூப்பிடுகிறார். இதனால், அதிர்ச்சி அடைகிறார் யமுனா.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here