யுவா-ப்ரீத்தி கல்யாணம் நடைபெறுமா? விறுவிறுப்படையும் ‘கண்ணான கண்ணே’ தொடர்!

0
யுவா-ப்ரீத்தி கல்யாணம் நடைபெறுமா? விறுவிறுப்படையும் 'கண்ணான கண்ணே' தொடர்!
யுவா-ப்ரீத்தி கல்யாணம் நடைபெறுமா? விறுவிறுப்படையும் 'கண்ணான கண்ணே' தொடர்!
யுவா-ப்ரீத்தி கல்யாணம் நடைபெறுமா? விறுவிறுப்படையும் ‘கண்ணான கண்ணே’ தொடர்!

சன் டிவியில் மிக விறுவிறுப்பாக அதிக பரபரப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே தொடர். இந்த சீரியலில் இன்று யுவா மற்றும் பிரீத்தியின் திருமண வைபோகம் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் யுவா யாரை திருமணம் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மிகுந்த அளவில் எழுந்து உள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!

கண்ணான கண்ணே சீரியல், வெறுக்கும் அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகளின் கதையை மையமாக கொண்டது. அவர்களின் பாச போராட்டங்களை வைத்து கதை நகர்கிறது. இதில் வரும் அப்பாவால் வெறுக்கப்படும் மீரா கதாபாத்திரம் தன் அப்பாவிற்காக எதையும் செய்வாள். அந்த வகையில் தன் காதலை தன் தந்தை மற்றும் தங்கைக்காக விட்டுக் கொடுத்து விடுகிறாள். இதையடுத்து தற்போது யுவா-பிரீத்தி கல்யாணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. மேலும் மீரா மற்றும் யுவாவின் நண்பர்களாக இதில் தாலாட்டு சீரியல் கதாபாத்திரங்களும் சேர்ந்து உள்ளனர்.

ஜூலை 17 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – திரிபுரா அரசு அறிவிப்பு!

மேலும் விருப்பம் இல்லமல் மீராவின் கட்டாயத்தின் பெயரில் ஒத்துக்கொண்டு உள்ள யுவாவின் திருமணம் பிரீத்தி உடன் நடக்குமா அல்லது மீரா உடன் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவுகிறது. இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் மீராவிடம் யுவா இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி விடுவேன் என கூறுகிறார். இதனால் கோபமடைந்த மீரா யுவாவின் கன்னத்தில் அறைந்து தங்களின் காதலுக்கு தரும் மரியாதையா இது என கேட்க ஆவேசமடையும் யுவா, மீராவிடம் சரமாரியாக பல கேள்விகள் கேட்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைகிறது . மேலும் யுவா திருமணம் குறித்த சந்தேகம் இந்த வாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here