சன் டிவி “கண்ணான கண்ணே” சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை – வைரலாகும் புகைப்படம்!!

0
சன் டிவி
சன் டிவி "கண்ணான கண்ணே" சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை - வைரலாகும் புகைப்படம்!!
சன் டிவி “கண்ணான கண்ணே” சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை – வைரலாகும் புகைப்படம்!!

சன் டிவியில் முக்கிய சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே. திங்கள் முதல் சனி வரை சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் புதிதாக பிக்பாஸ் நடிகை ஒருவர் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி உறுதிப்படுத்தப்படுகிறது.

கண்ணான கண்ணே:

தமிழ் சின்னத்திரை சீரியல்களுக்கு முன்னோடியாக சன் டிவி சீரியல்கள் இருக்கின்றனர். கால போக்கில் மக்களுக்கு விருப்பமான பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த சீரியல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று TRPயில் முன்னிலையில் இருக்கிறது. சன் டிவியில் முக்கிய சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே. திங்கள் முதல் சனி வரை சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் நல்ல டிஆர்பி ரேட்டிங்கும் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதலிடம் – 38வது வார TRP ரேட்டிங்!

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நிமிஷிகா மற்றும் ராகுல் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். நடிகர் பப்லு அப்பா ரோலில் நெகடிவ் ஷேடில் நடித்து வருகிறார். இந்நிலையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் இந்த சீரியலுக்கு மக்களிடம் மவுசு குறையாமல் இருக்கிறது. காரணம் அப்பா மற்றும் மகளுக்கு இடையில் உள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து இந்த சீரியலின் கதை நகர்கிறது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையின் குடும்ப புகைப்படம் – இணையத்தில் வைரல்!

இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாருமில்லை பிக்பாஸ் மூலமாக பிரபலமான நடிகை காஜல் பசுபதி தான். இவர் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்பதை பப்லு உடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் உறுதி படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வில்லி கதாபாத்திரம் மாற்றப்பட்ட நிலையில் அதில் இவர் நடிக்க இருக்கிறாரா என எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!