பணத்திற்காக அண்ணன்களை சார்ந்திருக்கும் கண்ணன், கோபத்தில் ஐஸ்வர்யா – சீரியலில் அடுத்த திருப்பம்!
முல்லைக்கு மட்டும் குடும்பத்தினர்கள் 5 லட்சம் வரைக்கும் செலவு செய்துள்ளனர். ஆனால், கண்ணனுக்கு சாப்பிட கூட காசு கொடுக்காமல் அண்ணன்களை தான் சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது என ஐஸ்வர்யா புலம்பும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை வெற்றியை கொடுக்குமா, முல்லை கர்ப்பமுறுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதை தொடர்ந்து செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சையின் மூலமாக வேண்டுமானால் கருவுற செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Exams Daily Mobile App Download
செயற்கை முறை சிகிச்சைக்கு குறைந்தது 5 லட்சம் வரை செலவாகும் என்பதால் மூர்த்தியும் ஜீவாவும் எப்படியோ கஷ்டப்பட்டு பலருடன் கடன் வாங்கி 5 லட்சத்தை ரெடி செய்கிறார்கள். 5 லட்சம் செலவு செய்தாலும் கூட செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஒருவேளை இந்த கருவுறுதல் சிகிச்சை தோல்வியடைந்து விட்டால் மீண்டும் ஐந்து லட்சம் கட்டி முதலில் இருந்து சிகிச்சையை தொடங்க வேண்டும். ஒரு முறை 5 லட்சத்தை ரெடி செய்யவே குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ராவின் இறப்பில் இருக்கும் சந்தேகங்கள் – மனம் திறந்த ஹேம்நாத் நண்பர்!
மீண்டும் 5 லட்சம் ரெடி செய்வது மிகவும் கஷ்டமான விஷயமாகும். இந்நிலையில், முல்லைக்காக மட்டும் குடும்பத்தினர்கள் இவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள். இந்த கடனை சமாளிக்கவே எத்தனை ஆண்டுகள் ஆக போகிறதோ, நான் பெண் பிள்ளையை வேற பெத்து வைத்திருக்கிறேன் என மீனா புலம்புகிறார். இதற்கு நடுவே சாப்பிட கூட கண்ணன் அண்ணன்களை தான் சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என ஐஸ்வர்யாவும் புலம்பும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.