முல்லைக்காக 5 லட்சம் செலவு செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாத கண்ணன் & மீனா – ப்ரோமோ ரிலீஸ்!

0
முல்லைக்காக 5 லட்சம் செலவு செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாத கண்ணன் & மீனா - ப்ரோமோ ரிலீஸ்!
முல்லைக்காக 5 லட்சம் செலவு செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாத கண்ணன் & மீனா - ப்ரோமோ ரிலீஸ்!
முல்லைக்காக 5 லட்சம் செலவு செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாத கண்ணன் & மீனா – ப்ரோமோ ரிலீஸ்!

முல்லையின் செயற்கை முறை கருவுறுதலுக்காக குடும்பத்தினர்கள் கஷ்டப்பட்டு 5 லட்சத்தை ரெடி செய்தது மீனாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தற்போது மீனாவுடன் கண்ணனும் சேர்ந்து முல்லையை திட்டுவது போன்ற புரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை வெற்றியை கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அதாவது முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர் கூறியதை தொடர்ந்து செயற்கை முறையில் சிகிச்சை எடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என குடும்பத்தினர் முடிவு எடுத்துள்ளனர். ஆனால் செயற்கை முறை கருவுறுதலுக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் செலவாகும் என மருத்துவர் கூறுகிறார்.

இன்று முதல் ஜூன் 14 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

அவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மூர்த்தி தற்போதைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என கூறுகிறார். அனைவருக்கும் சொந்தமான இந்த வீட்டை மட்டும் எப்படி முல்லைக்காக விட்டுக் கொடுக்க முடியும் எனக்கூறி மீனா சண்டை போடுகிறார். பின்பு எப்படியோ மூர்த்தியும் ஜீவாவும் சேர்ந்த 5 லட்சத்தை ரெடி செய்கிறார்கள். ஆனாலும், முல்லைக்கு மட்டும் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என மீனாவின் மனம் உறுத்திக்கொண்டே இருக்கிறது. அவ்வப்போது முல்லையிடம் சென்று இந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்படுகிறார்கள், இது உன்னால் மட்டும் தான் எனக் கூறி முல்லையே வேதனைப்படுகிறார்.

இந்த வாரம் முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை தொடங்கியிருக்கிறது. கண்டிப்பாக இந்த சிகிச்சை வெற்றியை கொடுக்கும் என கூற முடியாது எனவும், ஒருவேளை செயற்கை முறை கருவுறுதல் தோல்வியை சந்தித்தால் மீண்டும் 5 லட்சம் கட்டி செயற்கை முறை கருவுறுதலுக்கான சிகிச்சையை செய்ய வேண்டும் என மருத்துவர் கூறுகிறார். குடும்பத்தில் உள்ளவர்கள் இந்த ஐந்து லட்சத்தை ரெடி செய்யவே மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் 5 லட்சத்திற்கு எங்கே செல்வது என கூறி கவலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் மீனா முல்லையிடம் செயற்கை முறை கருவுறுதல் தோல்வியடைந்தால் மீண்டும் ஐந்து லட்சம் தர முடியாது என கோபமாக கூறி விடுவது போலவும், அதற்கு கண்ணனும் துணையாக நிற்பது போலவும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here