சீரியல் நடிகரை கரம்பிடித்த செய்திவாசிப்பாளர் கண்மணி – வைரலாகும் திருமண புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

0
சீரியல் நடிகரை கரம்பிடித்த செய்திவாசிப்பாளர் கண்மணி - வைரலாகும் திருமண புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!
சீரியல் நடிகரை கரம்பிடித்த செய்திவாசிப்பாளர் கண்மணி - வைரலாகும் திருமண புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!
சீரியல் நடிகரை கரம்பிடித்த செய்திவாசிப்பாளர் கண்மணி – வைரலாகும் திருமண புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

சின்னத்திரை நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொள்ளும் செய்தி அடிக்கடி வந்த வண்ணம் இருக்கும் நிலையில், தற்போது கலர்ஸ் தமிழில் சீரியல் ஒன்றில் பிரபலமான நடிகர் நவீன், சன் நியூஸ் செய்திவாசிப்பாளர் கண்மணியை காதலித்து கரம் பிடித்து இருக்கிறார்.

நவீன் கண்மணி திருமணம்:

காலம் காலமாக நடிகர் நடிகைகள் ஒன்றாக நடித்து காதலில் விழுந்து திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சின்னத்திரை நடிகர் நடிகைகள் பலர் காதல் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் நடிகைகளுக்கு சமமாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் அதிகமாக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி சீரியல் நடிகர் நவீனை காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

பாக்கியலட்சுமி கிச்சனில் இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா, முல்லை – வைரலாகும் “மகா சங்கமம்” வீடியோ!

கலர்ஸ் தமிழ் சேனலில் இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் நவீன். இவர் சன் டிவி செய்திவாசிப்பாளர் கண்மணியை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு அவர்களின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து இவர்களின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் இருவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். அதற்கு முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த அழகான ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலர் இந்த ஜோடிக்கு திருமண வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here