மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கும் “கனா காணும் காலங்கள்” சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

0
மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கும்
மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கும் "கனா காணும் காலங்கள்" சீரியல் - ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கும் “கனா காணும் காலங்கள்” சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “கனா காணும் காலங்கள்” சீரியல் தற்போது புது பொலிவுடன் பல நடிகர்களுடன் OTT தலத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

கனா காணும் காலங்கள்:

மக்களை கவரும் சீரியல்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்புவதில் விஜய் டிவி முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் 90’ஸ் கிட்ஸ் காலத்தில் பல முன்னணி சீரியல்கள் இருந்தன. கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற பல தொடர்கள் இருந்தனர். அந்த வகையில் நம்முடைய பள்ளி பருவ நினைவுகளை கண் முன்னே காட்டும் சீரியல் தான் கனா காணும் காலங்கள். இந்த சீரியல் ஒளிபரப்பான முதல் டாப் இடத்தில் இருந்தது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் சஞ்சீவ்? வெளியான ஷாக் தகவல்!

பின் முதல் சீசன் முடிக்கப்பட்டு இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. அதுவும் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த சீரியலில் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவரும் சின்னத்திரை வெள்ளித்திரை என பல படங்களிலும் சீரியல்களிலும் கலக்கி வருகின்றனர். இந்த சீரியல் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் இன்னும் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த சீரியலை மீண்டும் டிவியில் ஒளிபரப்ப வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

Vijay TV Bigg Boss Promo – பாவனியை காதலிப்பதாக சொன்னது யுக்தி என கூறும் அமீர்! ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் 90’ஸ் கிட்ஸ் விருப்பத்திற்கு ஏற்றார் போல இந்த சீரியல் மீண்டும் புது பொலிவுடன் புதிய கதையுடன் புது நடிகை நடிகர்களுடன் ஒளிபரப்பாக இருக்கிறது. அதுவும் இந்த சீரியல் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here