‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை விட்டு விலகும் கமல்? அடுத்து வரப்போவது யார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
'பிக் பாஸ்' நிகழ்ச்சியை விட்டு விலகும் கமல்? அடுத்து வரப்போவது யார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
'பிக் பாஸ்' நிகழ்ச்சியை விட்டு விலகும் கமல்? அடுத்து வரப்போவது யார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை விட்டு விலகும் கமல்? அடுத்து வரப்போவது யார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது அதிக சண்டைகள் நடந்து வரும் நிலையில், அதை விடவும் ரசிகர்கள் அதிகம் கவனிக்கும் வகையில் ஒரு செய்து வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் கமல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை அதிகம் கட்டிவைத்திருக்க முக்கிய காரணம் உலகநாயகன் கமல் தான். நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தையும் தாண்டி கமல் வரும் எபிசோடுகளை மட்டும் பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் அதிகம். கடந்த 5 ஆண்டுகளாக தமிழில் நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். உலக நாயகன் சின்னத்திரைக்கு வருவது குறித்து எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கும் இந்த நிகழ்ச்சியின் வெற்றி பதிலாக அமைந்தது.

‘ராஜா ராணி 2’ ஷூட்டிங்கில் நிறைமாத கர்ப்பிணியாக வலம் வரும் ஆலியா மானஸா – ரசிகர்கள் ஷாக்!

பிரபலங்களின் வாழ்கை முறை அவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளும் வகையில் நடத்தப்படும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது அதிக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ள OTT தளத்திற்கு செல்லும் முயற்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் முடிந்த கையோடு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் தொகுப்பாளராகவும் கமல் தான் இருப்பார் என்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா யார் தெரியுமா? கடந்து வந்த பாதை – ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நினைத்த அளவிற்கு வெற்றியை எட்டவில்லை. 24 மணி நேரமும் ஒளிபரப்பானாலும் கூட சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கமல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு விலக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாரத்துடன் கமல் விலக உள்ளதால், வரும் வாரத்தில் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!