இந்த வாரம் “பிக்பாஸ்” நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
இந்த வாரம்
இந்த வாரம் "பிக்பாஸ்" நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இந்த வாரம் “பிக்பாஸ்” நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் வரவில்லை. இந்நிலையில் இந்த வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 50 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கடந்த நான்கு சீசன்களிலும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். அதே போல ஐந்தாவது சீசனிலும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். இதுவரை இல்லாத அளவில் போட்டியாளர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்திருக்கிறார்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகருக்கு நடந்த திடீர் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அதனால் அவர் கடந்த வாரம் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ளாமல் மருத்துவமனையில் இருந்து திரை மூலம் கலந்து கொண்டார். மேலும் கடந்த வார எபிசோடை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அவரும் போட்டியாளர்களை சரமாரியாக கேள்வி கேட்டார்.

விஜய் டிவியில் விஜே மணிமேகலை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

எட்டாவது வாரம் முடிவுக்கு வரும் நிலையில், நாளைய எபிசோடில் கமல் வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். நாளைய எபிசோட் குறித்த ப்ரோமோ மூலமாக உலகநாயகன் வருவாரா என உறுதியாக தெரிந்துவிடும். கடந்த வாரம் கமல்ஹாசன் கலந்து கொள்ளாமல் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த நிலையில் நாளை கமல்ஹாசன் தொகுத்து வழங்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!