விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி நிறுத்தம்? கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சி நிறுத்தம்? கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சி நிறுத்தம்? கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி நிறுத்தம்? கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்படுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நடிகருக்கு கொரோனா:

தமிழ் சின்னத்திரையில் மிக பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் வரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருக்கிறார். மிகப்பெரிய நடிகர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே தொடக்க வெற்றியாக அமைந்தது. மேலும் இந்த ஆண்டு சீசன் 5 இல் வேறு தொகுப்பாளர் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகும் ஆல்யா? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் நிம்மதி!

ஆனால் இந்த சீசனிலும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது தெரிந்ததும் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரிக்க தொடங்கியது. மற்ற நான்கு சீசன்கள் போல இல்லாமல் இந்த சீசனில் கமல் போட்டியாளர்களை நேரடியாக கேள்வி கேட்டு வருகிறார். அதனால் நிகழ்ச்சி மக்களின் ஆதரவுடன் தற்போது 50 ஆவது நாள்ளை நெருங்கி இருக்கிறது. நேற்றைய எபிசோடில் கமல் தாமரை பற்றி சொன்ன யூகம் நன்றாக இருந்தது. மேலும் மக்களை யோசிக்கும் படி செய்தது.

சரஸ்வதியை மருமகளாக ஏற்க மறுக்கும் கோதை? பதிலை கேட்டு ஷாக்கான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அண்ணிகள்!

இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்படுமா என் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். இது குறித்து கமல்ஹாசன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். இன்னமும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here