பாரதி கண்ணம்மா அருண், செம்பருத்தி ஷபானா நடிப்பில் “கல்யாணம் கல்யாணம்” சீரியல் – விரைவில் தொடக்கம்!

0
பாரதி கண்ணம்மா அருண், செம்பருத்தி ஷபானா நடிப்பில்
பாரதி கண்ணம்மா அருண், செம்பருத்தி ஷபானா நடிப்பில் "கல்யாணம் கல்யாணம்" சீரியல் - விரைவில் தொடக்கம்!
பாரதி கண்ணம்மா அருண், செம்பருத்தி ஷபானா நடிப்பில் “கல்யாணம் கல்யாணம்” சீரியல் – விரைவில் தொடக்கம்!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில், விஜய் டிவி சீரியல்கள் என்றாலே புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் கல்யாணம் கல்யாணம் என்ற புதிய சீரியல் தொடங்கப்பட இருக்கிறது.

கல்யாணம் ப்ரோமோ:

விஜய் டிவி சீரியல்கள் என்றாலே புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். பல சீரியல்கள் மாறுபட்ட கதையுடன், திடீர் மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் அருண், தற்போது புதிய சீரியலில் களமிறங்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா நடிக்க இருக்கிறார்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பார்வதி பற்றி அறிந்த பாஸ்கர்!

ஷபானா மற்றும் பாரதி இருவருக்கும் தனி தனியாக ரசிகர்கள் இருக்கும் நிலையில் இருவரும் இணைத்து நடக்க இருக்கும் “கல்யாணம் கல்யாணம்” சீரியல் எப்போது தொடங்கப்படும் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். குடும்பப் பாங்கான கதைகளுக்கு பல குடும்ப ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் இந்த சீரியலும் வெற்றி பெற போவது உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த சீரியலில் பல நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இரண்டாவது பிரசவத்திற்கு பின் மீண்டும் உடற்பயிற்சி செய்யும் நடிகை ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து ஏகப்பட்ட மக்களின் மனம் கவர்ந்த நடிகை காவ்யா அறிவுமணி இவர்களுடன் இணைந்து நடிக்க இருப்பதாக ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. அதனால் முல்லை ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆனால் இது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ தான் என்பதால் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!