கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் – ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!!

0
கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!!
கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!!
கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் – ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!!

கல்வி ‘டீவி’ நிகழ்ச்சிகளில் இடம் பெறும் பாடம் தொடர்பான வீடியோவில் சர்ச்சைக்குரிய அம்சங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆன்லைன் வழி பாடம்:

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த கல்வியாண்டில் ஆரம்பத்திலிருந்தே மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தான் பாடங்கள் அனைத்தும் நடத்தப்படுகின்றது. தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது.

742 கணினி ஆசிரியர்களின் தேர்வு  பட்டியல் வெளியீடு – ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்!!

கல்வி தொலைக்காட்சி:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழக அரசு கல்வி தொலைக்காட்சியின் மூலம் பாடங்களை நடத்துகின்றது. கல்வி தொலைக்காட்சியில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு ஆசிரியர் பாடங்களை நடத்துவார்கள். இதன் மூலம் மாணவர்கள் பாடங்களை சந்தேகம் இல்லாமல் படித்து வந்தனர்.

சர்ச்சை காட்சி:

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அந்த காட்சியில், திருவள்ளுவர் காவி நிற உடை அணித்திருப்பது போல் இருந்தது.

எதிர்ப்பு:

திருவள்ளுவர் உடை சம்பந்தமான காட்சிக்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவான நபர் அவரை குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்தவராக சித்தரிக்க கூடாது என்று கூறினார்கள்.

2021 ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை – RBI அறிவிப்பு!!

கல்வி இயக்குனரகம் அறிவுரை:

இதனால் கல்வி இயக்குனரகம் ஆசிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் படி, வீடியோ பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் பாட புத்தகத்தில் இருக்கும்படி மட்டுமே பாடங்களையும், அதில் உள்ளவாறு மட்டுமே படங்களையும் பயன்படுத்த வேண்டும். அதில், சர்ச்சைக்குரிய விஷயங்கள் எதுவும் இடம் பெறக்கூடாது.

கவனக்குறைவாகவோ, வேண்டுமென்றோ தேவையற்ற அம்சங்கள் இடம்பெற்றால் அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வீடியோ பாடங்களை தயாரித்தபின் அதை உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின் ஒளிபரப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!