கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கு – உச்சநீதிமன்றம் அதிர்ச்சி உத்தரவு!

0
கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கு - உச்சநீதிமன்றம் அதிர்ச்சி உத்தரவு!
கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கு - கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கு - உச்சநீதிமன்றம் அதிர்ச்சி உத்தரவு!அதிர்ச்சி உத்தரவு!
கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கு – உச்சநீதிமன்றம் அதிர்ச்சி உத்தரவு!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி தற்கொலை குறித்து அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவு:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இயங்கி வந்த சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி, பள்ளி விடுதியில் இருந்து கடந்த ஜூன் 13 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது. மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாணவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது இறுதியில் வன்முறையாக மாறி பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டு தீக்கிரையானது.

Exams Daily Mobile App Download

அது மட்டுமில்லாமல் பள்ளி நிர்வாகம் சார்பில் சரியான விளக்கம் அளிக்கப்படாத நிலையில் மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும் அதற்காக அரசு மருத்துவரை நியமனம் செய்யவும் உத்தரவிடப்பட்டது. மேலும் மாணவியின் பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் உடன் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதில் விருப்பம் இல்லாத பெற்றோர் பிரேத பரிசோதனை நடைபெறும் போது அதில் கலந்து கொள்ளவில்லை.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு!

மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அதில் மாணவியின் பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. அந்த விசாரணையின் போது நீங்க கூறும் மருத்துவர்களை ஏன் நியமிக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி கேட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here