கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை காஜல் அகர்வால் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!
தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் இதனை உறுதிபடுத்தும் விதமாக ஒரு புகைப்படம் வெளியாகி இருப்பதாக ரசிகர்கள் சந்தேகங்களை கிளப்பியுள்ளனர்.
நடிகை காஜல்
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். ஹிந்தியை சொந்த மொழியாக கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் தனது திறமையான நடிப்பால் பல லட்சக்கணக்கான் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் கவனம் பெற்று தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 50 திரைப்படங்களில் நடித்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை காஜல் அகர்வால், கடந்த ஆண்டில் கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பாரதி கண்ணம்மா தொல்லை தாங்க முடியவில்லை, கதறிய ரசிகர் – பதில் கொடுத்த வில்லி வெண்பா!
திருமணத்திற்கு பின்பும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் 36 வயதான நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் தயாராகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வந்த காஜல் அகர்வால், அந்த திரைப்படத்தில் இருந்து பாதியிலேயே விலகி கொண்டார். இது போல தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் இருந்து அவர் பின் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
ஆர்யனுடன் திருமணத்திற்கு பின்னர் ‘செம்பருத்தி’ ஷபானாவின் நெகிழ்ச்சியான பதிவு – குவியும் லைக்குகள்!
இதற்கு காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பது தான் காரணம் என்றும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் அவரது பேபி பம்ப் தெளிவாக தெரிவதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என்றாலும் இது குறித்து காஜல் அகர்வால் மற்றும் கிச்சுலு தரப்பில் இருந்து இதுவரை எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.