TNPSC பொது தமிழ் – கடித இலக்கியமும் நாட்குறிப்பும்

0
TNPSC பொது தமிழ் – கடித இலக்கியமும் நாட்குறிப்பும்

இங்கு கடித இலக்கியமும் நாட்குறிப்பும் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

கடித இலக்கியமும் நாட்குறிப்பும்

நேரு கடிதங்கள்

காலம் : 1889 – 1964

பெற்றோர் : மோதிலால் நேரு சொரூபராணி

பிறந்த இடம் : அலாகாபாத் ஆனந்தபவனில்

அரசியல் வாழ்க்கை:

 • 1916 – 27 வயதில் காந்தியைச் சந்தித்தார்
 • 1919 – அரசியலில் தீவிரமாக ஈடுபாடு
 • 1964 – இறப்பு வரை அரசியல் வாழ்க்கை
 • 1947 – 1964 – பிரதமர் பதவி (முதல் பிரதமர்)

எழுதிய புத்தகங்கள்

1. சுயசரிதை

2. ஊரக வரலாற்றுக் காட்சிகள்

3. புதிய இந்தியாவைக் காணல்

 • நேரு 1930 முதல் 1933 வரை சிறையில் இருந்த போது தன் மகள் இந்திராவுக்கு உலக வரலாற்றை விவரித்து எழுதிய 176 கடிதங்கள் தொகுப்பட்டு ‘உலக வரலாறு’ என்ற பெயரில் தனிப் புத்தகமாக வெளிவந்துள்ளது.
 • நேரு தனக்கு உலகப் பிரபலங்கள் பலரும் எழுதிய 330 கடிதங்களையும் தான் பிறருக்கு எழுதிய 38 கடிதங்களையும் அவரே தொகுத்து 1958-ம் ஆண்டு என்ற பெயரில் வெளியிட்டார்.

நேரு இந்திராகாந்திக்கு எழுதிய கடிதங்கள்

 • 1922 முதல் 1964 வரை 42 ஆண்டுகள் தன் மகள் இந்திராவுக்கு நேரு கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.
 • நேரு வெளிநாடு சென்ற போதும் இந்தியாவில் இருந்த பொழுதும் மகளுக்குக் கடிதம் எழுதினார். சிறைச்சாலையில் அடைப்பட்ட பொழுதும் கூட. அவர் கடிதம் எழுதுவதை நிறுத்தவே இல்லை.

1. அல்மோரா சிறையில் எழுதிய கடிதம்

 • மேற்கு வங்காளத்தில் சாந்தி நிகேதன் என்னும் இடத்தில் தாகூரின் விசுவபாரதி கல்லூரியில் 1934ம் ஆண்டு இந்திராகாந்தி சேர்ந்தார்.
 • அப்பொழுது உத்தராஞ்சல் மாநிலம் அலமோரா மாவட்டச் சிறைச் சாலையில் இருந்து நேரு 1935 பிப்ரவரி 22-ம் நாள் அன்று எழுதிய கடிதம் ஒன்றில் இந்திராவுக்கு புத்தக வாசிப்பு பற்றி பெரிதும் வலியுத்தியுள்ளார்.
 • “நான் சிறையில் நலமாக இருக்கிறேன். கிருபளினி உதவியுடன் படிக்க வேண்டிய பாடங்களை நீ முடிவு செய்துவிட்டாய் போலும் மகிழ்ச்சி இப்படிப் பேராசிரியர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. வகுப்பில் அமர்ந்து பாடங்களைக் கேட்பதை விட அது நல்லது.”
 • “நீ வாசிப்பதற்கு அவ்வப்போது நான் புத்தகங்கள் அனுப்பலாமா என்று கேட்டிருந்தேன். நீயும் அனுப்பச் சொல்லி எழுதி இருக்கிறாய். இப்போது எனக்கு ஒரு திகைப்பு. உனக்கு எப்படிப்பட்ட புத்தகங்களை அனுப்புவது?”
 • “உன் ஈடுபாடு தெரிந்தபின் என்ன புத்தகம் வாசிக்கலாம் என்பது குறித்து உனக்கு எழுதுவேன். உன்மீது புத்தகங்களைத் திணிக்க நான் விரும்ப மாட்டேன்.

இவ்வாறெல்லாம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நேரு இக்கடிதத்தில் புத்தகங்களைப் பற்றி பொதுவாகக் குறிப்பிட்டுள்ள சில தகவல்கள் பின்வருமாறு.

சேக்ஸ்பியர் மில்டன் போன்றோர் எவ்வளவு அற்புதமான ஆங்கில படைப்பாளிகள்.

பிளேட்டோவின் புத்தகங்கள் சுவையானவை; சிந்தனையைத் தூண்டுபவை பிளேட்டோ கிரேக்க சிந்தனையாளர்

பிளேட்டோவின் ‘குடியரசு’ கிரேக்க நாடகங்கள் நூல்கள் எனப் படிக்க வேண்டிய நூல்களைக் கூறுகின்றார்.

இந்திராகாந்தி படிக்கப்போவதாகக் கூறிய டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்” என்ற நூல் பற்றியும் குறிப்பிடுகின்றார்.

பேட்ரண்ட்ரஸ்ஸலின் ஆங்கில நடையும் கருத்து வளமும்தனக்குப் பிடித்தமானவை என்கிறார்.

காளிதாசரின் சாகுந்தலம் நாடகம் வாசிக்க வேண்டிய நூல் என்கிறார்.

பெர்னார்ட்வின் பல நாடக நூல்கள் வாசிக்கத் தகுந்தவை என்கிறார்.

கேம்பிரிட்ஜ் – இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகம்
• சேக்ஸ்பியர் – ஆங்கில நாடக ஆசிரியர்
• மில்டன் – ஆங்கிலக் கவிஞர்
• பிளேட்டோ – கிரேக்கச் சிந்தனையாளர்
• காளிதாசன் – வடமொழி நாடக ஆசிரியர்
• டால்ஸ்டாய் – ரயநாட்டு எழுத்தாளர்
• பெர்னார்ட் – ஆங்கில நாடக ஆசிரியர்
• பெட்ரண்ட் ரஸ்ஸல் – சிந்தனையாளர் கல்வியாளர்
• அல்மோரா சிறை – உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது
• கிருபாளினி – விசுவபாரதியில் பணிபுரிந்த ஒரு பேராசிரியர்

2. நைனி சென்ரல் ஜெயிலிலிருந்து கடிதம்

 • 1930 அக்டோபர் 26 அன்று நைனி சென்ரல் ஜெயிலிருந்து நேரு தன் மகள் இரந்திராவுக்கு பிறந்த நாள் கடிதம் எழுதுகிறார்.
 • நேரு தாம் உபதேசம் பண்ணும் போதெல்லாம் சீனப்பயணி யுவான்சுவாங் கதைதான் நினைவுக்கு வருகிறது என்கிறார்.
 • கல்வி மேம்பாட்டை உணர்ந்த மேலோர் யுவான் சுவாங்கிற்கு ‘பௌத்த மதாச்சாரியார்’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளனர் என்று கூறுகிறார்.
 • நேரு எழுதிய கடிதத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர்
 • முன்னாள் மத்திய அமைச்சர் திரு ழு.ஏ. அழகேசன்.

காந்தியடிகளின் கடிதங்கள்

 • 1917-ம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தாய்மொழி வழிக்கல்வி பற்றிய தலைமை உரை மாணவர்களுக்கு ஏற்ற வண்ணம் கடித வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்ற முக்கியக் கருத்துக்கள்.
 • “பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது அடித்தளமில்லாமல் கட்டடம் எழுப்புவது போன்றது.
 • “ரவீந்தரநாத் தாகூரின் இலக்கிய நடையின் உயர்வு அவருடைய ஆங்கில அறிவால் மட்டுமின்றி தாய்மொழி மொழிப்புலமையினாலும் வந்ததே ஆகும். முன்சிராம் பேச்சாற்றலுக்குக் காரணம் அவர் தம் தாய் மொழி அறிவே; மதன் மோகன் மாளவியாவின் ஆங்கிலப் பேச்சு தங்கத்தைப் போல் ஒளி வீசுகிறது.
 • “வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம். குறைபாடு மொழியைப் பயன்படுத்துபவர்களிடம் தான் இருக்கிறது. மொழியில் இல்லை.
 • “படித்த இந்தியர் அனைவரும் அயல் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. இவ்வாறு அயல் மொழியிடம் ஒரு பற்றுதலைத் தோற்றுவிப்பதோ ஊக்கமளிப்பதோ தேவையில்லை.
 • “இந்தியாவில் தாய் மொழிக்கல்வி அளிக்கப்பட்டு இருந்தால் ஜெகதீ சந்திர போஸ் பி.சி.ராய் போன்ற நம்மிடையே பல போஸ்களும் ராய்களும் தோன்றி இருப்பார்கள்.
 • “பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். தெரிந்தறியாத ஒரு மொழியின் மூலம் கல்வி கற்பது இந்த இணக்கத்தைக் குறைத்து விடும்.
 • காந்தியடிகள் தன் கடிதங்களைக் குஜராத்தி மொழியில் எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். தினந்தோறும் தனிநபர்களுக்கு பத்திரிக்கைகளுக்கும் கடிதம் எழுதினார்.
 • காந்தியடிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் பகுதி – 1 வால்ஜி கோவிந்தஜி தேசாய் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முதல் பதிப்பு 1962ம் ஆண்டு வெளிவந்தது. ஆசிரம சகோதரிகள் ஆசிரமக் குழந்தைகள் பணியாட்கள் போன்றோருக்குப் பல தலைப்புகளில் கடிதம் எழுதினார்.

மு.வரதராசனாரின் கடிதம்

 • அன்னைக்கு தம்பிக்கு தங்கைக்கு நண்பர்க்கு என நான்கு கடித இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.
 • தமிழ் இலக்கிய வரலாறு மொழி வரலாறு மொழிநூல் நாவல்கள் எனப் பலவகைப்பட்ட நூல்கள் படைத்து தமிழ் தொண்டாற்றியுள்ளார்.
 • மு.வ.வின் பிறநூல்களுக்கான திறவுகோல் அவர்தம் கடித இலக்கிய நூல்களே என்பர்.
  நல்ல தமிழ்ப் பெயர்களைத் தன்னுடைய கடிதங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
 • தம்பிக்கு எழுதிய கடிதத்தில் அன்புள்ள அண்ணன் வளவன் தம்பி எழில் என்று தொடங்கி எழுதியுள்ளார்.
 • “தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாகவும் வழங்கப்பட வேண்டும். ஆட்சி மொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரை தமிழ் வழங்க வேண்டும். கல்விமொழி என்றால் எவ்வகைக் கல்லூரிகளிலும் எல்லா பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்க வேண்டும்.”
 • “திருமணம் வழிபாடுகளைத் தமிழில் நடத்த வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற செம்மொழியைப் போற்று. சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது புறக்கணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.”
 • தொண்டுக்கு முந்து தலைமைக்கு பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்.
 • தமிழகத்தில் தனி மரங்களாகத் தமிழர் உயர்வதையே காண்கிறோம். தேர்ப்பாகக் கூடி உயர்வதைக் காணமுடியாதது பெருங்குறை. தமிழர்கள் நான்கு பேர் சேர்ந்து ஒரு மரமாய் ஒன்றை நடத்த முடியாது. நடத்தினாலும் அது நெடுங்காலம் நீடிக்காது. நம்மிடையே பிரிக்கும் ஆற்றல் உண்டு; பிணைக்கும் ஆற்றல் இல்லை.
 • “இந்த நாட்டில் சொன்ன படி செய்ய ஆளில்லை; ஆனால் கண்டபடி சொல்ல ஆள் ஏராளம் ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்புகிறார். தன்னை அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழுச்சி நேர்ந்தது என்று விவேகானந்தர் கூறுகிறார்.
 • தமிழர்கள் கூடிக்கூடி செயல் செய்து உயரும் வல்லமை உண்டு என்பதை நாம் உலகிற்கு உணர்த்தும் நாள் வர வேண்டும். அன்று தான் தமிழ் சமுதாயம் உயர வழி பிறக்கும்.

அண்ணாவின் கடிதம்

 • “திராவிட நாடு” என்ற இதழில் கடிதங்களை எழுதினார். ‘தம்பிக்கு’ என்று விரித்து எழுதியுள்ளார்.
 • கடித இலக்கியத்தை வளர்த்தவர்களில் பேரறிஞர் அண்ணாவிற்கு பெரும் பங்கு உண்டு
  இவருடைய கடிதத்தில் தமிழ் தமிழர் தமிழ்ப்பண்பாடு தமிழர் தாழ்வும் உயர்வும் தமிழர் செய்ய வேண்டியது. பகுத்தறிவு ஆரிய எதிர்ப்பும் போன்ற கருத்துகள் பிளிர்கின்றன.
 • தாயும் சேயும் கொஞ்சி மகிழ்வது போல நிலமடந்தையும் தன் மக்களுக்கு வளம் அளிக்கும் முன்பு விளையாட்டு காட்டுவாள். “உழைத்துப்பெறு! உரிய நேரத்ல் பெறு! முயற்சி செய்து பெறு! என்று அன்புடன் ஆணையிடுகிறாள்.
 • தன் கடிதத்தில் கவிஞர் முடியரசன் தமிழர் திருநாளான தை முதல் நாளை “உழைப்பினை உணர்த்தும் பெருநாள்” என்றும் “புதுமை இன்பம் பூணும் நன்நாள்” என்றும் பாடியிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.
 • “பொங்குக இன்பம்! பொங்குக புதுமை! பொங்குக பொலிவு! வளம் பெருகிடுக! வாழ்வு சிறந்திடுக! வாழ்வு சிறந்திடு! வாழ்க தமிழ்! வாழ்க தமிழகம்!” என்று வாழ்த்துகளுடன் தம்பிகளைக் கேட்டுக்கொள்கிறார்.

ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு

பிறப்பு : 1709 – சென்னை பெரம்பூர்

தந்தை : திருவேங்கடம்

மைத்துனர் : நைனியப்பர்

ஆசிரியர் : எம்பார்

பணி :
• புதுவையில் அரசுப் பணியில் உதவியாளராக இருந்தார்.
• பிறகு திவானாகப் பதவி உயர்வு பெற்றார்.
•துய்ப்ளெச்சு என்னும் ஆளுநரின் மொழிப்பெயர்ப்பாளர் (துபாசி) இறந்ததனால் பன்மொழியறிவு பெற்ற ஆனந்தரங்கம் அப்பணிக்கு நியமிக்கப்பட்டார்.

நாட்குறிப்பு

 • 1736 – 1761 வரை சுமார் 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
 • தம் நாட்குறிப்புக்கு ‘தினப்படி செய்தி குறிப்பு’ ‘சொஸ்தலிகிதம்’ (சொஸ்த – தெளிவான லிகிதம் – கடிதம்) தமிழ்ப்பற்றாளர் ஆதலால் நாட்குறிப்பைத் தமிழிலேயே எழுதியுள்ளார்.

நாட்குறிப்பில் இடம் பெற்ற செய்திகள்

 • ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகளின் பெரும்பகுதி வணிகச்செய்திகளையே கூறுகின்றன.
  புதுச்சேரிக்கு கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற் போலவும் அவரவர் அளவிலே கல்யாணம் நடப்பது போலவும் சந்தோத்ததாக எழுதியுள்ளார்.
 • வீடுகளில் தொடர்ந்து திருடி வந்த திருட்டு கும்பல் ஒன்று பிடிபட்ட போது திருடர்களுக்கு ஐம்பது கசையடிகளோடு காதுகளை அறுத்தும் மக்கள் தண்டனை வழங்கியதாகத் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.
 • 1746-இல் சுங்கு செட்டியாரின் பெண்கள் இருவருக்குத் திருமணம் நடந்தது.
 • அத்திருமணத்திற்கு வருகைத் தந்த புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளெக்ஸ் அவர்களுக்கு ரூ.1000 அந்தரங்கத்திலே கொடுத்து பந்தலில் பாக்கு வெற்றிலை மட்டும் கொடுத்து அனுப்பினார் செட்டியார்.
 • சிறப்பு விருந்தினராக ஆளுநர் வந்திருந்தபோது அவர் வரும்போது உட்காரும்போது – சாப்பிடும் போது – எழும்போது என ஒவ்வொரு முறையும் 21 குண்டுகள் முழங்கின.
  பிரெஞ்சுக்காரர்களுக்கும் இந்திய மன்னர்களுக்கும் இடையே பாலமாக இருந்தவர்.

ஆனந்தரங்கம் பிள்ளை பெற்ற பெருமைகள்

 • 1749 – இல் முசபர்சங் என்பவர் ஆனந்தரங்கத்துக்கு 3000 குதிரைகளை வழங்கி ‘மன்சுபேதார்’ என்ற பட்டத்தையும் வழங்கினார்.
 • உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி ‘பெப்பிஸ்’ என்பார்.
 • இந்தியாவில் பெப்பிஸ் எனப் போற்றப்படுவர் ஆனந்தரங்கம் பிள்ளை ஆவார்.
 • இவரை “நாட்குறிப்பு வேந்தர்” எனவும் போற்றுகின்றனர்.
 • செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும் அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாராகவும் நியமனம் பெற்றார்.
 • துய்ப்ளே ஆட்சியில் ஆனந்தரங்கர் பல்லக்கில் செல்லும் உரிமைஅவர் வரும் போது மங்கல ஒலிகள் ஒலிக்கும் உரிமை ஆளுநர் மாளிகைக்குள் செருப்பணிந்து செல்லும் உரிமை போன்ற பல தனிப்பட்ட உரிமைகளைப் பெற்றிருந்தார்.
 • அருணாச்சல கவிராயர் தம் ராமநாடகத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றி மீண்டும் ஒருமுறை இவர்முன் அரங்கேற்றினார்.
 • இவரின் நாட்குறிப்புகள் அவர் வீட்டில் இருப்பதை ‘கலுவாமொம்பிரேன்’ என்பவர் கண்டறிந்தார்.
 • நாட்குறிப்பின் சில பகுதிகளை ‘குலியன் வென்சோன்’ பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்தார்.

ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்துள்ள நூல்கள்

 • ஆனந்தரங்கக்கோவை – தியாகராச தேசிகர்
 • ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் – அரிமதி தென்னகன்

ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்

 • கள்வன் நொண்டிச்சிந்து

ஆனந்தரங்கர் புதினங்கள்

 • ஆனந்தரங்க விஜயசம்பு – சீனிவாசக்கவி (வடமொழி)
 • ஆனந்தரங்க ராட்சந்தமு – கஸ்தூரிரங்கக்கவி (தெலுங்கு)

கடித இலக்கியமும் நாட்குறிப்பு PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here