மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்ததை அறிந்து வீட்டிற்கு ஓடி வரும் கதிர் – பார்க்க விடாமல் தடுக்கும் தனம்!

0
மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்ததை அறிந்து வீட்டிற்கு ஓடி வரும் கதிர் - பார்க்க விடாமல் தடுக்கும் தனம்!
மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்ததை அறிந்து வீட்டிற்கு ஓடி வரும் கதிர் - பார்க்க விடாமல் தடுக்கும் தனம்!
மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்ததை அறிந்து வீட்டிற்கு ஓடி வரும் கதிர் – பார்க்க விடாமல் தடுக்கும் தனம்!

முல்லைக்காக செலவு செய்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுக்கும் வரைக்கும் வீட்டின் பக்கம் வரவே மாட்டேன் என வீட்டை விட்டு கிளம்பிய கதிர் தற்போது மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விட்டதை அறிந்து மூர்த்தியை பார்க்க வீட்டிற்கு வரும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையும் கதிரும் குடும்பத்தை விட்டு வெளியேறி செல்கிறார்கள். மீண்டும் கதிர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லைக்கு குடும்பத்தினர்கள் செயற்கை முறையில் சிகிச்சை செய்ய 5 லட்சம் வரைக்கும் செலவு செய்ததை மீனாவும் அவரது குடும்பத்தினர்களும் மிகவும் குத்திக் காட்டிக் கொண்டே இருந்தனர்.

விஜய் டிவியில் முடிவுக்கு வந்த பிரபல சீரியல் – கடைசி நாளில் கண்கலங்கிய நடிகர், நடிகைகள்! வைரலாகும் வீடியோ!

இதனால் கடுப்பான கதிர் இவ்வளவு அசிங்கப்பட்டும் இந்த வீட்டில் இருக்க வேண்டுமா என நினைத்து முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விடலாம் என நினைக்கிறார். குடும்பத்தில் உள்ள அனைவரும் எவ்வளவு தடுத்தும் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியேறிய தீர வேண்டும். எப்படியாவது வேறு ஏதாவது கடையில் வேலை பார்த்தாவது ஐந்து லட்ச ரூபாய் கடனை அடைத்து விடுவேன் எனக் கூறி முல்லையை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். உடனே, மூர்த்தி இந்த வீட்டை விட்டு நீ சென்று விட்டால் அதன் பிறகு நீ வரவே முடியாது எனக் கூறுகிறார்.

ஆனாலும் மூர்த்தி சொல்வதை காதில் வாங்கி கொள்ளாமல் முல்லையை மட்டும் அழைத்துக்கொண்டு கதிர் வீட்டை விட்டுக் கிளம்புகிறார். கதிர் வீட்டை விட்டு கிளம்பியதும் பிறந்ததிலிருந்து தோல் மீது போட்டு வளர்த்து தம்பி தன்னை விட்டு கிளம்பினான் என வருத்தத்தில் மூர்த்திக்கு நெஞ்சு வலி வருகிறது. மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்த விஷயத்தை அறிந்து கதிர் மீண்டும் வீட்டிற்கு வரும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. மூர்த்தி கதிரிடம் பலமுறை கெஞ்சியும் கேட்காமல் கதிர் வீட்டை விட்டு போனதால்தான் மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்தது என கோபத்தில் தனம் மூர்த்தியை பார்க்க அனுமதிப்பாரா எனவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here