சவாலில் வெற்றி அடையும் கதிர் & முல்லை, சந்தோஷத்தில் குடும்பத்தினர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!

0
சவாலில் வெற்றி அடையும் கதிர் & முல்லை, சந்தோஷத்தில் குடும்பத்தினர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!
சவாலில் வெற்றி அடையும் கதிர் & முல்லை, சந்தோஷத்தில் குடும்பத்தினர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!
சவாலில் வெற்றி அடையும் கதிர் & முல்லை, சந்தோஷத்தில் குடும்பத்தினர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில நாட்களாக சொதப்பலாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது கதையில் முக்கிய திருப்பம் ஏற்பட உள்ளது. இதன் காரணமாக வர இருக்கும் எபிசோடுகளில் கதை விறுவிறுப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில வாரமாக ஒரே மாதிரியான கதையில் சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் கதை விறுவிறுப்பாக செல்லாதான்னு கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்ல முல்லையும், கதிரும் வீட்டை விட்டு போய் தனியா ஹோட்டல் ஆரம்பிக்கிறாங்க. இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா வீட்டிலேயே பியூட்டி பார்லர் ஆரம்பிச்சு நடத்துறாங்க. ஒரு வழியா கண்ணனுக்கும் வேலை கிடைச்சு பேங்க் வேலைக்கு போக ஆரம்பிக்குறாரு. இதுக்கு இடையில் மூர்த்தி ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி ஒரு வழியா சரியாகி வந்துட்டாரு.

கோபியை அறைந்து விடும் ராதிகாவின் கணவர் ராஜேஷ், அதிர்ச்சியில் ராதிகா – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!

இந்த நிலையில் கதிர் முல்லையோட அக்காகிட்ட போட்ட சவாலில் ஜெயிக்க கஷ்டப்பட்டு உழைக்கிறாரு. இதுக்கு அப்புறம் கதிர் ஹோட்டல்ல சமைக்கிற ஸ்டைலை கஸ்டமர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் போடுறாரு. உடனே அந்த வீடியோ எல்லாருக்கும் பரவி கதிர் ஹோட்டலுக்கு நிறைய கஸ்டமர் வருவது மாதிரியான சீன்கள், அப்புறம் இதை பாக்குற முல்லையோட அக்கா வயிறு எரிஞ்சு போற மாதிரியான காட்சிகள் இடம்பெற உள்ளது. இன்னொரு பக்கம் மூர்த்தி வீட்டை விற்கிற முயற்சியில் இறங்குறாரு.

Exams Daily Mobile App Download

இதை தெரிஞ்சுகிற மீனாவோட அப்பா நானே இந்த வீட்டை வாங்கிக்கிறேன் அப்படின்னு கேக்குறாரு. இத கேக்குற குடும்பமே என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறாங்க. அதாவது மூர்த்தி சொந்தத்துக்குள்ள இதுனால சண்டை வந்துரும் அப்டினு மீனாவோட அப்பாவுக்கு வீட்டை குடுக்க மாட்டேன்னு சொல்றதுக்கும் வாய்ப்பிருக்கு அப்படிங்கிற மாதிரி எதிர்பார்க்கப்படுகிறது. இல்ல யாருக்கோ விக்க போறோம் உங்களுக்கு கொடுக்குறதுக்கு என்ன அப்டினு வீட்டை விக்கிறதும் வாய்ப்பு இருக்கு அப்டிங்கிற மாதிரி எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here