சொந்த தொழில் தொடங்கும் கதிர் முல்லை, உதவி செய்யும் மூர்த்தி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!

0
சொந்த தொழில் தொடங்கும் கதிர் முல்லை, உதவி செய்யும் மூர்த்தி -
சொந்த தொழில் தொடங்கும் கதிர் முல்லை, உதவி செய்யும் மூர்த்தி - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ப்ரோமோ!
சொந்த தொழில் தொடங்கும் கதிர் முல்லை, உதவி செய்யும் மூர்த்தி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கதிர் வீட்டை விட்டு வந்த நிலையில், கதிர் ஹோட்டல் வேலை செய்யும் இடத்திற்கு முல்லை அம்மா வந்து சண்டை போடுகிறார். அதனால் கதிர் முல்லை புது தொழில் தொடங்க இருக்கும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் மிகப்பெரிய விரிசல் விழுந்துள்ளது. கதிர் முல்லையை வீட்டை விட்டு வெளியே அழைத்து சென்று தனியாக வீடு பார்த்து குடும்பத்தை தொடங்குகிறார். முதலில் முல்லையிடம் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்வதாக சொல்லிவிட்டு ஹோட்டலில் வேலைக்கு சேருகிறார். கதிரை அந்த நிலைமையில் பார்த்து முல்லை அம்மா அப்பா மிகவும் வருத்தப்படுகின்றனர். முல்லை அம்மா அங்கையே சண்டை போடுகிறார்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய புதிய டோக்கன் முறை – அதிரடி அறிவிப்பு!

மறுநாள் முல்லை அக்கா மல்லி வந்து பார்த்துவிட்டு முல்லைக்கு நான் பணம் கொடுக்கிறேன் தனியாக கதிரை தொழில் தொடங்க சொல்கிறார். அது குறித்து கதிரை சந்தித்து முல்லை அம்மா பேச கதிர் வேண்டாம் என சொல்கிறார். பின் ஓனரிடம் சண்டை போட கதிருக்கு வேலை போய்விடுகிறது. அதனால் முல்லையிடம் சொல்லி வருத்தப்பட இப்போது உங்களுக்கு ஹோட்டலில் வேலை செய்த அனுபவம் இருக்கிறது. அதனால் தனியாக ஹோட்டல் வைக்கலாம் என சொல்கிறார்.

கதிர் தனது நண்பனின் உதவி உடன் ஹோட்டல் வைக்க இடம் பார்க்க வருகிறார். அப்போது கதிரின் நண்பர் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் தம்பி என சொல்ல, ஓனர் மூர்த்திக்கு போன் செய்து உங்க தம்பி மெஸ் வைக்க இடம் கேட்டார் கொடுக்கலாமா என கேட்கிறார். மூர்த்தி சரி என சொல்லி கொஞ்சம் அட்வான்ஸ் குறைத்து கொள்ள சொல்கிறார். பின் கதிரிடம் ஓனர் அட்வான்ஸில் 10000 ரூபாய் கழித்து தர சொல்கிறார். மூர்த்தி தம்பி என்பதால் குறைத்து கொள்வதாக சொல்ல, முல்லை அப்பா சந்தோசமாக பணத்தை கொடுக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here