ஜூன் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!

0
ஜூன் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை - RBI முக்கிய அறிவிப்பு!
ஜூன் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை - RBI முக்கிய அறிவிப்பு!
ஜூன் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டுமே பண்டிகைகள் மற்றும் வார இறுதி நாட்கள் என அனைத்தையும் சேர்த்து 12 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் விடுமுறை:

அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை என்பதற்கான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வழங்கி வருகிறது. மே தினம் போன்ற முக்கிய விடுமுறை தினங்கள் இருந்ததால் மே மாதத்தில் மட்டுமே 14 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. மே மாதத்தை போன்று ஜூன் மாதத்தில் சிறப்பு தினங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு – வழக்குகள் ரத்து!

வார விடுமுறை தினங்களை தவிர ஜூன் மாதத்தில் எந்த விடுமுறையும் இல்லை. உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டுமே 6 நாட்கள் தான் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த இந்த விடுமுறை நாட்கள் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது. எந்த மாநிலத்தில் எந்தெந்த தினங்களிளெல்லாம் விடுமுறை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு வங்கிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த விடுமுறை தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள் என அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். இந்த 12 நாட்களும் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியல் இதோ,

 • 05.06.2022 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
 • 11.06.2022 (சனிக்கிழமை): இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை
 • 12.06.2022 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
 • 14.06.2022 (செவ்வாய்): முதல் அரசர்/துறவி குரு கபீர் ஜெயந்தி காரணமாக ஒரிசா, சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் முதலிய மாநிலங்களுக்கு விடுமுறை

 • 15.06.2022 (புதன்கிழமை): ராஜ சங்கராந்தி,ஒய்எம்ஏ தினம், குரு ஹர்கோவிந்த் பிறந்த நாள் காரணமாக ஒரிசா, மிசோரம், ஜம்மு மற்றும் காஷ்மீர் முதலிய மாநிலங்களுக்கு விடுமுறை
 • 19.06.2022 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
 • 22.06.2022 (புதன்கிழமை): கர்ச்சி பூஜை காரணமாக திரிபுரா மாநிலத்திற்கு விடுமுறை
 • 15.06.2022 (சனிக்கிழமை): நான்காவது சனிக்கிழமை வங்கி விடுமுறை
 • 26.06.2022 ஞாயிறு): வாராந்திர விடுமுறை
 • 30.06.2022 (புதன்கிழமை): ராம்னா நீ – மிசோரம்

  TNPSC Online Classes

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here