ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு இன்னும் 9 நாட்கள் விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!

0
ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு இன்னும் 9 நாட்கள் விடுமுறை - RBI முக்கிய அறிவிப்பு!
ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு இன்னும் 9 நாட்கள் விடுமுறை - RBI முக்கிய அறிவிப்பு!
ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு இன்னும் 9 நாட்கள் விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதத்திற்க்கான விடுமுறை தினங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. இன்றிலிருந்து விடுமுறை தினங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் இன்னும் 9 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் தான் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பண்டிகை தினங்கள், இரண்டாவது சனிக்கிழமை மற்றும் 4வது சனிக்கிழமை போன்ற தினங்களில் விடுமுறை அளிப்பது வழக்கம். ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கிதான் வழங்கி வருகிறது. கடந்த மே மாதத்தில் மட்டுமே மே தினம், குரு ரவீந்திரநாத் ஜெயந்தி போன்ற சில பண்டிகை தினங்கள் வந்த காரணத்தினால் 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

மதுரை மாவட்டத்தில் நாளை (ஜூன் 9) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்படும் இந்த விடுமுறை தினங்கள் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய வங்கிகள் மற்றும் அனைத்து வெளிநாட்டு வங்கிகளின் துறைகளுக்கும் பொருந்தும். வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும் கூட அனைத்து நாட்களிலும் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்த மாநிலத்தில் எந்தெந்த தினங்களிலெல்லாம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் தெளிவாக புரிந்துகொண்டு வங்கிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள விடுமுறை பட்டியலை பார்க்கலாம்,

  • 11-06-2022 (சனிக்கிழமை): இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை
  • 12-06-2022 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
  • 14-06-2022 (செவ்வாய்): முதல் அரசர், துறவி குரு கபீர் ஜெயந்தி காரணமாக ஒரிசா, சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு வங்கி விடுமுறை
  • 15-06-2022 (புதன்கிழமை): ராஜ சங்கராந்தி/ஒய்எம்ஏ தினம்/குரு ஹர்கோவிந்த் பிறந்த நாள் காரணமாக ஒரிசா, மிசோரம், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளுக்கு வங்கி விடுமுறை
    Exams Daily Mobile App Download
  • 19-06-2022 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
  • 22-06-2022 (புதன்கிழமை): கர்ச்சி பூஜை காரணமாக திரிபுரா பகுதிகளில் வங்கி விடுமுறை
  • 25-06-2022 (சனிக்கிழமை): நான்காவது சனிக்கிழமை வங்கி விடுமுறை
  • 26-06-2022 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
  • 30-06-2022 (புதன்கிழமை): ராம்னா நீ காரணமாக மிசோரம் பகுதியில் வங்கி விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!