அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூன் மாதத்திற்கான விடுமுறை பட்டியல்!
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இதில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான விடுமுறைகள் வேறுபடும். அதன்படி ஜூன் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் குறித்த விவரத்தை ரிசர்வ் வங்கி வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.
வங்கிகள் விடுமுறை:
பொதுவாக வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மாதந்தோறும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியிடப்படும். மேலும் அந்தந்த மாவட்டம் மற்றும் மாநிலங்களின் பண்டிகைகளை பொறுத்து விடுமுறை நாட்கள் வேறுபடும்.
TCS நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, திறன்கள் மற்றும் முக்கிய விவரங்கள்!
தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் வரும் ஜூன் மாதத்தில் வங்கிகள் 12 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது. எனவே வங்கி விடுமுறைகளை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளில் பணத்தை எடுக்க மற்றும் டெபாசிட் செய்ய போன்ற பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
ஜூன் மாத விடுமுறை தினங்கள்:
- ஜூன் 2 (வியாழன்): மகாராணா பிரதாப் ஜெயந்தி/தெலுங்கானா ஸ்தாபக தினம் – ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விடுமுறை
- ஜூன் 3 (வெள்ளி): ஸ்ரீ குரு அர்ஜுன் தேவ் ஜியின் தியாக தினம் – பஞ்சாப் மாநிலத்தில் விடுமுறை
- ஜூன் 5 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
- ஜூன் 11 (சனிக்கிழமை): இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை
- ஜூன் 12 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
- ஜூன் 14 (செவ்வாய்): துறவி குரு கபீர் ஜெயந்தி – ஒரிசா, சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விடுமுறை
- ஜூன் 15 (புதன்கிழமை): ராஜ சங்கராந்தி/ஒய்எம்ஏ தினம்/குரு ஹர்கோவிந்த் பிறந்த நாள் – ஒரிசா, மிசோரம், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் விடுமுறை
- ஜூன் 19 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
- ஜூன் 22 (புதன்): கர்ச்சி பூஜை – திரிபுரா
- ஜூன் 25 (சனி): நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை
- ஜூன் 26 (ஞாயிறு): வார விடுமுறை
- ஜூன் 30 (புதன்): ராம்னா நீ – மிசோரம்