ஜூன் 2018 – முக்கியமான நாட்கள் மற்றும் விவரங்கள்

0

ஜூன் 2018 – முக்கியமான நாட்கள் மற்றும் விவரங்கள்

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 2018 PDF பதிவிறக்கம் செய்ய

இங்கு ஜூன் மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

PDF பதிவிறக்கம் செய்ய

For English – June Important days PDF Download

தேதிதினம் விவரங்கள்
ஜூன் 1உலக பால் தினம்பால் தினம் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO)ஆல் உருவாக்கப்பட்டது.இது பொருளாதார வளர்ச்சி, வாழ்வாதாரங்கள் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றிற்கு பால் துறையின் பங்களிப்பை கொண்டாடுகிறது. 2018 தீம் இந்தியா – “Drink Move Be Strong”
ஜூன் 3உலக சைக்கிள் நாள்ஜூன் 3, 2018 அன்று முதல் அதிகாரப்பூர்வ உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது.12 ஏப்ரல் 2018 அன்று ஐக்கிய நாடுகள் சைக்கிள் தினமாக அங்கீகரிக்கப்பட்டது.
ஜூன் 5உலக சுற்றுச்சூழல் நாள் 2018உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும். இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972-ம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2018 தீம் – ‘Beat plastic pollution’
ஜூன் 8உலக கடல் தினம்கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும், கடல் உணவுகள் பற்றி அறியவும், பெருங்கடலுக்கு மரியாதை செலுத்தவும் உலகப் பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது. 1992ஆம் ஆண்டு, ஜூன் 8 அன்று பூமியைப் பாதுகாப்போம் என்கிற உடன்படிக்கை உருவானது. அன்றைய தினத்தை உலகப் பெருங்கடல் தினமாகக் கொண்டாடுகிறோம். 2018 தீம் – Preventing plastic pollution and encouraging solutions for a healthy ocean
ஜூன் 11பசுமை மிசோர தினம்1999 ஆம் ஆண்டு முதல் ஜூன் 11 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் பசுமை மிசோரம் தினம் கொண்டாடப்படுகிறது.
ஜூன் 12உலக குழந்தை தொழிலாளர் எதிரப்பு   தினம்சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) சிறுவர் தொழிலாளர்களின் உலகளாவிய அளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும், அதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் குழந்தை தொழிலாளர் எதிரப்பு உலக தினத்தை 2002ல் அனுசரிக்க முடிவுசெய்தது. 2018 தீம் – Generation Safe & Healthy
ஜூன் 14 உலக இரத்ததான தினம்ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 14 அன்று உலகெங்கிலும் உள்ள நாடுகளில் உலக இரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இரத்தம் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக அன்பளிப்பாக, செலுத்தப்படாத இரத்த நன்கொடையாளர்களுக்கும், வழக்கமான இரத்த நன்கொடைகள் தேவைப்படும் விழிப்புணர்வுக்காகவும் இந்த நிகழ்ச்சிக்கு உதவுகிறது. 2018 Theme :- Be there for someone else. Give blood. Share life.
ஜூன் 16சர்வதேச வீட்டுத் தொழிலாளர்கள் தினம் (IDWD)சர்வதேச வீட்டுத் தொழிலாளர் தினம் (IDWD) ஜூன் 16ம் தேதி   ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
ஜூன் 18கோவா புரட்சி தினம்72 ஆண்டுகளுக்கு முன்னர் (1946ல்) தொடங்கப்பட்ட போராட்டம் 1961ல் கோவாவின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது.
ஜூன் 20உலக அகதிகள் தினம்ஜூன் 20ம் தேதி 18 வது ஆண்டு உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகிறது. அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கியமான நோக்கமாகும். தீம் 2018 – “Now more than ever, we need to stand #WithRefugees”
ஜூன் 21சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 மற்றும் நடைபெறும் உலகளாவிய நிகழ்வு இது, யோகா பயிற்சியின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவதே இதன் நோக்கமாகும். 2018 தீம் – “Yoga for Peace”
உலக இசை தினம்உலக அளவில் ஜூன் 21 ஆம் தேதி தான் உலக இசை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஜூன் 23ஒலிம்பிக் தினத்தின் 70வது ஆண்டு விழா1948 ஜனவரி மாதம், ஒலிம்பிக் தினத்தை ஜூன் 23, 1894 இல் பாரிசில் ஐ.ஓ.சி உருவாகியதை நினைவுகூறும் யோசனைக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்தது.
ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம்போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, ஜூன் 26ம் தேதி போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2018 தீம் – “Listening to children and youth is the first step to help them grow healthy and safe”
ஜூன் 272   வது   ஐக்கிய   நாடுகள்   சிறு   ,குறு    மற்றும்   நடுத்தர   அளவிலான   தொழில்நிறுவனங்கள்   தினம்சிறு, குறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் (MSMEs) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27 அன்று கொண்டாடப்படுகிறது. எம்.எஸ்.எம்.இ. தினம் 2018 இளைஞர்களுக்கு அர்ப்பணிக்கப்படும், இளைஞர் தொழில்முனைவோர் மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு போன்ற தலைப்புகளை உள்ளடக்கும். எம்.எஸ்.எம்.இ.   தினம்   2018   தீம் – ‘The Youth Dimension’
ஜூன் 2912-வது புள்ளியியல் தினம்12-வது புள்ளியியல் தினத்தை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறையும், இந்தியப் புள்ளியியல் நிறுவனமும் கூட்டாக கொண்டாடியது.பேராசிரியர் பி.சி. மஹலானோபிஸ்-ன் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 2018 ஆண்டின் தீம் – “Quality Assurance in Official Statistics”

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!