முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 6

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 6

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூன் நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

  • இந்திய தீபகற்பத்தில் இரண்டு வகை தவளைகள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளன. கிழக்குத் தொடர்ச்சி மலையிலிருந்து பெஜர்வாரியா கலிங்காகவும், மேற்குத்தொடரிலிருந்து பெஜர்வாரியா கிருஷ்ணனும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • உயர் செயல்திறன் கணினி, தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை மேம்படுத்துவதற இன்டெல்லுடன் இணைந்து புனேவில் ஒரு மையத்தை அமைப்பதாக டாடா கன்சல்டன்சி சர்வீஸ் அறிவித்துள்ளது.
  • சீனாவில் உள்நாட்டிலேயே தறிக்கப்பட்ட , நீண்ட காலமாக வேலைசெய்யக்கூடிய எச்.ஐ.வி. மருந்து அல்புவிர்டைடு(Albuvirtide) ,பல்லாயிரக்கணக்கான எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வரமாக இருக்கலாம் என்று சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
  • மகாத்மா காந்தி பியட்மேரிட்ஜ்ஸ்பர்க்கில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, பிரிட்டனின் பாரபட்சமான விதிகளுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் மக்களை அணிதிரட்டிய வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் ஒரு மூன்று நாள் தொடர் நிகழ்வு அவரின் வாழ்க்கை வரலாற்றை திரையிடும் போது குறிக்கப்பட்டது.
  • மருந்து எதிர்ப்பு சக்தி வாய்ந்த சூப்பர்பக்குகளை எதிர்த்துப் போராட புதிய வழிகளைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் 3,000 க்கும் மேற்பட்ட பாக்டீரியாக்களின் மரபணுக்களை மாற்றியுள்ளனர்.
  • பங்களாதேஷ் கட்டுமான நிறுவனமான MAX குழுவுடன் இணைந்து, ஹிந்துஸ்தான் கன்ட்ரோல் கம்பெனி லிமிடெட் (HCC), 110 மில்லியன் டாலர் (ரூ .737 கோடி) ஒப்பந்தம் ரூபர்பூர் அணு மின் நிலையத்தின் யூனிட் 1 க்கான செயல்பாட்டுக்காக ரஷ்யாவின் மாநில அணு நிறுவனம், JSC Atomstroyexport, ஆல் சேர்ந்து கையெழுத்திடப்பட்டுள்ளது
  • இந்தியா – ரஷ்யாவுக்குமிடையே தபால்தலைகளை கூட்டாக வெளியிடுவது தொடர்பாக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான  மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைக்கப்பட்டது.
  • விண்வெளி திட்டங்கள், நீர் நிர்வாகம், போக்குவரத்து நிர்வாகம் ஆகிய துறைகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கென இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் நீடித்த மற்றும் பொலிவுறு நகர அபிவிருத்திக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • நிலைத்த நகர மேம்பாட்டுத்துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கென இந்தியா – இங்கிலாந்து இடையே 2018 ஏப்ரலில் கைடியழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் பி.எஸ்.எல்.வி. (6வது கட்டம்) தொடர் திட்டத்திற்கும் இந்த திட்டத்தின் கீழ் முப்பது பி.எஸ்.எல்.வி. செலுத்து வாகனத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் அளித்தது.
  • பத்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட்டுகள் கொண்ட திட்டத்தை ரூ. 4338.20 கோடி செலவில் தொடருவதற்கான நிதியை அளிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பத்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் III செலுத்துவாகனத்தின் செலவுகள், அத்தியாவசிய வசதிகள் விரிவாக்கம், திட்ட நிர்வாகம் மற்றும் செலுத்தும் இய்க்கம் ஆகியவற்றின் செலவு இதில் அடங்கும்.
  • 2018 மார்ச் மாதம் நீடித்த நகர்ப்புற மேம்பாட்டுத் துறையில் இந்தியாவும் பிரான்சும் செய்து கொண்ட உடன்படிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை ஐந்தாண்டு காலங்களுக்கு அமலில் இருக்கும்.
  • அஞ்சல் துறையின் கிராம அஞ்சல் பணியாளர்களின் (ஜிடிஎஸ்) ஊதியம் மற்றும் படிகளை உயர்த்தும் திட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • இந்தியாவின் பிரதிநிதியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் ஓமன் நாட்டின் பிரதிநிதியாக அந்நாட்டு போக்குவரத்து தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கும் இடையே விண்வெளியை அமைதிப் பணிகளுக்கு ஈடுபடுத்துவதற்கென மஸ்கட்டில் 2018 பிப்ரவரி மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா – இந்தோனேசியா ஒருங்கிணைந்த ரோந்துப் பிரிவின் (IND-INDO ​​CORPAT) 31 வது பதிப்பின் நிறைவு விழா 06 முதல் 09 ஜூன் 18 வரை நடைபெறுகிறது .
  • நீர் வள அமைச்சகத்தின் ரூபாய் 600 கோடி திட்டமான அடல் புஜல் யோஜனாவிற்கு  (ஏபிஹைஐ) உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
  • 83 வது இடம் – இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி, இந்தியாவில் இருந்து இந்த பட்டியலில் இடம்பெரும் ஒரே ஒரு விளையாட்டு வீரர் ஆவார்.
  • மரியா ஃபெர்னாண்டா எஸ்பினோசா [ஈக்வடார்] – ஐ.நா பொதுச்சபையின் தலைவர்
  • ஐ.நா.சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது பெண் ஆவார்.
  • இந்திய தேர்தல் ஆணையம் அதன் ஆன்லைன் ஆர்.டி.ஐ. போர்ட்டலை தொடங்கியுள்ளது
  • ஜப்பான், கிபூவில் 18 ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!