நடப்பு நிகழ்வுகள் ஜூன் 5

0

நடப்பு நிகழ்வுகள் ஜூன் 5

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூன் நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

முக்கியமான நாட்கள்

ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் நாள் 2018

தீம் – ‘Beat plastic pollution’

  • உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும். இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972-ம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய செய்திகள்

ஆந்திரப் பிரதேசம்

புருஷோத்தப்பட்னம்  திட்டம்

  • கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் மற்றும் வட ஆந்திரா பகுதியின் சில பகுதிகள் ஆகியவற்றிற்கான நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளை புருஷோத்தப்பட்னம் லிப்ட் பாசன திட்டம் (பிஎல்ஐபி) பூர்த்தி செய்யும்.

உத்திரப்பிரதேசம்

ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ITMS)

  • முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் முதல் ஒருங்கிணைந்த போக்குவரத்து முகாமைத்துவ முறைமை (ITMS) திறந்துவைத்தார். இது போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தவும், சாலை விதிகளை மீறுபவர்களை தண்டிப்பதற்கும் போலீசாருக்கு உதவுவதாகவும், சாலை விபத்து வழக்குகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை நிச்சயமாகக் குறைக்கும் என்றும் தெரிவித்தார். .

தமிழ்நாடு

தமிழக அரசு ஜவுளி தொழில் வேலை / சேவை பிரிவுகளை இ-வே பில்லிலிருந்து விலக்குகிறது

  • தமிழக அரசு துணிகள், ஆடைகள் ஆகியவற்றிற்கான வேலை மற்றும் சேவை பிரிவுகளை இ -வே பில்லிலிருந்து  விலக்கியுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாடு டிஸ்போஸபிள் பிளாஸ்டிக்கிற்கு  தடை விதித்துள்ளது

  • தமிழக அரசு 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1முதல் டிஸ்போஸபிள் பிளாஸ்டிக்கின் பொருட்கள், உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் மீது தடைவிதிக்கவுள்ளது.

ஒடிசா

ஆசியாவின் முதல் ‘ப்ளூ கொடி’ கடற்கரை சந்திரபாகா

  • கொனார்க் கரையோரத்தில் உள்ள சந்திரபாகா, கடற்கரை தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகளை பராமரிப்பதற்காக ஆசியாவின் முதல் ‘ப்ளூ கொடி’கடற்கரையாக மாறவுள்ளது.

வணிக & பொருளாதாரம்

ஆர்.பி.ஐ நிதி எழுத்தறிவு வாரத்தை தொடங்குகியது

  • ரிசர்வ் வங்கி இந்தியாவில் நிதி எழுத்தறிவு வாரத்தை வாடிக்கையாளர் பாதுகாப்பு என்பதை முக்கிய கருப்பொருளாக கொண்டு தொடங்கியுள்ளது.

இந்தியாவில் 2 கோடி கார் தயாரித்து சுசூகி நிறுவனம் சாதனை

  • இந்தியாவில் 2 கோடி வாகனங்களை தயாரித்து சுசூகி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. சிறிய கார் பிரிவில் முன்னணி நிறுவனமான ஜப்பானை சேர்ந்த சுசூகி நிறுவனம் இந்தியாவில் 1983-ம் ஆண்டு தனது செயல்பாடுகளைத் தொடங்கியது.

மாநாடுகள்

யோகா குறித்த முன்றாவது தேசிய சுகாதார பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு

  • சுகாதார பத்திரிகை ஆசிரியர்களுக்கான யோகா குறித்த மூன்றாவது ஆண்டு மாநாட்டை புதுதில்லியில் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா பயிற்சி நிறுவனத்தில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் இன்று தொடங்கி வைத்தார்.
  • ஆண்டு தோறும் ஜூன 21ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக இந்த மாநாட்டை மொரார்ஜி தேசாய் தேசிய யோகா பயிற்சி நிறுவனமும், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகமும் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.

பாதுகாப்பு செய்திகள்

ஜியோ-இன்டெலிஜென்ஸ் ஆசியா 2018

  • ஜியோ-இன்டெலிஜென்ஸ் ஆசியா 2018 பதினொன்றாம் பதிப்பை புதுடில்லியிலுள்ள ஜியோஸ்பேஷியல் மீடியா அண்ட் கம்யூனிகேஷன் நடத்தியது.
  • தீம் : ‘GeoSpatial : A Force Multiplier for Defence and Industrial Security’.

2 வது BSF மவுண்ட். எவரெஸ்ட் பயணம்

  • பத்மஸ்ரீ லவ்ராஜ் சிங் தர்மசாக்டு என்பவர் எவரெஸ்ட் சிகரத்தை 7-ஆவது முறையாக சென்றடைந்து வரலாறு படைத்துள்ளார்.

திட்டங்கள்

KUSUM திட்டம்

  • குசும் (கிசான் உர்ஜு சரக்ஷா ஈவாம் உத்தான் மஹாபியான்)திட்டம் ஜூலை மாதத்தில் விவசாயிகளிடையே சூரிய சக்தியைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தப்படும்.இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு சூரிய நீர் பம்புகள் வழங்கப்படும்

கரும்பு சக்கை அடிப்படையிலான உணவு அடைத்து விற்கும் முறையை அறிமுகம் செய்கிறது ரயில்வே அமைச்சகத்தின் ஐ.ஆர்.சி.டி.சி.

  • உலக சுற்றுச்சூழல் தினம் 2018 கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கும் நிலையில் ரயில்வே அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. புதுதில்லியில் இருந்து புறப்படும் தேர்ந்தெடுக்கப்படும் 8 சதாப்தி மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளுக்கு அளிக்கும் உணவுகளை கரும்புச் சக்கை அடிப்படையிலான உணவு அடைத்து விற்கப்படும் முறையை பரிசோதனை அடிப்படையில் மேற்கொண்டுள்ளது.
  • பசுமை முறைக்கு மாறும் ரயில்வே முயற்சியின் ஒரு பகுதியாக இனி பயணிகளுக்கு அளிக்கப்படும் உணவுகள் இனி பாலிமர் பிளேட்களுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கும் பிளேட்களில் அளிக்கப்படும்.

விருதுகள்

  • திரு. தீரஜ் ராம் கிருஷ்ணா தேசிய கோபால் ரத்னா விருது

[‘பழங்கால இனங்களின் சிறந்த பால் விலங்குகளை பராமரிப்பதற்காக’]

நியமனங்கள்

  • எம்.கே.ஜெயின் – ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்
  • கோர்னெலிஸ் வெரிஸ்விஜ்க் – கோஏர் புதிய தலைமை நிர்வாக அதிகாரி
  • பிப்பா ஹாரிஸ் – பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (BAFTA) புதிய தலைவர்
  • டாமி தாமஸ் – மலேசியாவின் புதிய அட்டர்னி ஜெனரல்
  • ஒமர் அல்-ரஸ்ஜாஸ் – ஜோர்டானின் பிரதம மந்திரி

விளையாட்டு செய்திகள்

கால்பந்து இண்டர்காண்டினென்டல் கோப்பை

  • நான்கு நாடுகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் இந்திய அணி கென்யாவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.

யு.எஸ் ஓபன் போட்டியில் சுபாங்கர்  தகுதி பெற்றுள்ளார்

  • யுனைடெட் ஓப்பன் கோல்ஃப் சாம்பியன்ஷிப்பில் சுபாங்கர் ஷர்மா ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!