தமிழகத்தில் கலைஞர் பிறந்தநாள் (ஜூன் 3) அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் உத்தரவு!

0
தமிழகத்தில் கலைஞர் பிறந்தநாள் (ஜூன் 3) அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் கலைஞர் பிறந்தநாள் (ஜூன் 3) அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் கலைஞர் பிறந்தநாள் (ஜூன் 3) அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் திமுக கட்சியின் தலைவரும் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அன்று அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசு விழா:

தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி. இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் இருந்தவர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர் தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்டார். தனது 14 வது அகவையில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மாநில அளவிலான “அனைத்து மாணவர்களின் கழகத்தில் சேர்ந்து சமூக பணிகளிலும் ஈடுபட்டார்.

தலைநகரில் நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசின் அதிரடி முடிவு!

1960 ஆம் ஆண்டு திமுக கட்சியின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தார். 1969ம் ஆண்டு அக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். அதே ஆண்டு முதல் முறையாக தமிழக தமிழக முதல்வரானார். தொடர்ந்து அக்கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் பதவி வகித்தார். மேலும் தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை கருணாநிதி பதவி ஏற்றார். 2016ம் ஆண்டு முதல் இவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர் 2018ம் ஆண்டு சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.

இவருக்கு பிறகு இவரது மகன் முக ஸ்டாலின் அவர்கள் கட்சி பொறுப்பை ஏற்று தலைமை தாங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார். இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கு வழிகாட்டியாக இருந்தவர் தலைவர் கலைஞர். இவரது பிறந்த நாளான ஜூன் 3 அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் கம்பீர தோற்றத்துடன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலை நிறுவப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!