ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 6, 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 6, 2018

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

  • ஐ.நா வின் சிறப்பு நிறுவனமான யுனெஸ்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும் விளையாட்டிற்கான டிசைன் பல்கலைக்கழகம் விரைவில் விசாகப்பட்டினத்தில் திறக்கப்படும்.
  • கிழக்கு கடற்கரை இரயில்வே ஒரே நாளில், சம்பல்பூர் பிரிவில் இரண்டு நிலையங்களுக்கு இடையே 06 வரையறுக்கப்பட்ட உயரமான சுரங்கப்பாதை அமைத்தது.
  • முதன்முதலாக இந்திய இரயில்வேயில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங் கேட்டையும் அகற்றியது சம்பல்பூர் பிரிவு, ஒடிசா.
  • உலக அறிவுசார் சொத்து நிறுவனம் (WIPO) விரைவில் காப்புரிமை தரவுத்தளத்தை அணுகுவதற்காக ஜெய்ப்பூரில் ஒரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆதரவு மையத்தை (TISCs) திறக்கும்.
  • அச்சிடப்பட்ட அட்டை டிக்கெட்டுக்கள் மற்றும் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுக்களை நீக்குவதற்கும் தடையற்ற டிக்கெட்களை வழங்குவதற்கும் குறைந்த விலை போர்ட்டபிள் டிக்கெட் அமைப்பை (பி-யுடிஎஸ்) தெற்கு ரயில்வே உருவாக்கியுள்ளது.
  • திருவனந்தபுரம் டெக்னோபார்க்கில் எர்ன்ஸ்ட் & யங் (EY) உலகளாவிய வணிக மையம் அமைக்கத் திட்டம்.
  • இயற்கை பாதுகாப்பு கழகத்தால் நிறுவப்பட்ட இயற்கை தகவல் மையம் உள்ளூர் சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • ஹம்பன்டோட்டாவில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை இழப்புக்களிலிருந்து மீட்பதற்கு இலங்கையுடன் கூட்டு முயற்சியை மேற்கொள்வதற்கு இந்தியா உடன்பட்டு முடிவு.
  • வர்த்தக செயலாளர் ரிதா தியோதியா புதுதில்லியில் இ-வர்த்தக பணிக்குழுவின் முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் நடந்த எட்டாவது சர்வதேச சவுராஷ்டிரா பட்டேல் கலாச்சார சமாஜ் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
  • ரயில்வே வாரண்டுகளுக்கு பதிலாக மின் டிக்கெட்டை தேர்ந்தெடுக்கும் முதல் துணைராணுவப் படை, தேசிய பாதுகாப்புப் படை(NSG) ஆகும்.
  • இசை அகாடமி மூலம் கடம் மேதைக்கு விருது
  • H. விநாயகம் (‘விக்குவிநாயகம்) – சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது
  • நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்காக ‘GST Verify’ என்ற மொபைல் ஆப்பை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி வாரியம் (CBIC) உருவாக்கியுள்ளது.
  • ஜோர்ஜியாவில் நடந்த திபிலிசி கிராண்ட் பிரிக்ஸ் மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ பிரிவில் பஜ்ரங் புனியா வென்று சாம்பியன் ஆனார், 86kg பிரிவில் தீபக் பூனியா வெண்கலத்தை வென்றார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!