நடப்பு நிகழ்வுகள் ஜூலை 3, 2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 3, 2018

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

தேசிய செய்திகள்

புது தில்லி

இந்தியாவில் சிறந்த பல் மருத்துவ கல்லூரியாக MAIDS தேர்வு

  • டெல்லி மவுலானா ஆசாத் இன்ஸ்டிடியூட் ஆஃப் டென்டல் சயின்சஸ் (MAIDS) தொடர்ந்து ஏழாவது ஆண்டாக “இந்தியாவின் சிறந்த பல் மருத்துவக் கல்லூரி” எனத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

KVIC இ-மார்க்கெட்டிங் அமைப்பை அறிமுகப்படுத்துகிறது

  • காதி மற்றும் கிராமிய கைத்தொழில் ஆணையம் (KVIC) புதுடில்லியில் உள்ள காதி நிறுவன மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு (KIMIS) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இ-மார்க்கெட்டிங் அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியது.

அசாம்

ஆன்லைன் சட்ட இணக்கத்தை அறிமுகப்படுத்திய முதல்  எண்ணெய் பொதுத்துறை நிறுவனம்

  • அஸ்ஸாமின் நும்லிகர் சுத்திகரிப்பு நிறுவனம் (NRL) ‘லெகட்ரிக்ஸ்’ அறிமுகப்படுத்தியதன் மூலம் ஆன்லைன் சட்டபூர்வ இணக்க முறையை பின்பற்றும் முதல் எண்ணெய் பொது நிறுவனம் ஆனது .

ஜார்கண்ட்

இந்தியாவின் முதலாவது அர்ப்பணிக்கப்பட்ட காதி மால்

  • காதி மற்றும் காதி பொருட்களை தயாரிப்பதற்காக சந்தைக்கு ஊக்கமளிக்கும் முயற்சியில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதன் முதல் ‘காதி மால்’ அமைத்து வருகிறது.

தெலுங்கானா

ஹைதராபாத் அரசு பள்ளிகளில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு சிறப்பு லட்டு

  • ஜூலை மாதத்தில் இருந்து ஹைதராபாத் அரசுப் பள்ளிகளில் பெண்களுக்கு ராகி, நெய், வெல்லம், உலர்ந்த பழங்கள், நட்ஸ் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிறப்பு லட்டு வழங்கத்திட்டம்.
  • மத்திய அரசின் “Beti Bachao Beti Padao” திட்டத்தின் கீழ் கூடுதல் ஊட்டச்சத்து ஆதரவு வழங்கும் முதல் நகரம் ஹைதராபாத் ஆகும்.

மேகாலயா

பெஹ்டியன்க்லாம் விழா

  • வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரபலமான நான்கு நாள் “பெஹ்டியன்க்லாம்” மேகாலயா கலாச்சார விழாவில் கலந்து கொண்டார், ஒவ்வொரு வருடமும் மேகாலாயவிலுள்ள ஜோவாய் புறநகரில் இந்த விழா நடைபெறும்.

சர்வதேச செய்திகள்

கொலம்பியாவின் சிரிபிகியூடே பூங்கா உலக பாரம்பரிய தளமாக ஐ.நா. அறிவித்தது

  • ஐக்கிய நாடுகள் சபை கொலம்பியாவின் சிரிபிகியூடே தேசிய பூங்காவை உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது.

அறிவியல் செய்திகள்

ஜூலை 27ல் தோன்றுகின்றது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்

  • இந்த நூற்றாண்டில் நடைபெற இருக்கும் மிக நீளமான சந்திர கிரகணம் வருகின்ற ஜூலை 27ம் தேதி நடைபெற இருக்கின்றது.
  • சந்திர கிரகணம் நடக்கின்ற நேரத்தில், பூமியின் நிழலானது, நிலவின் மீதுபடும். அதனால் தான் மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்திற்கு மாற்றம் அடைகிறது.

வணிகம் & பொருளாதாரம்

APTA வின் கீழ் ஆசிய இறக்குமதியில் கட்டண குறைப்பு

  • ஆசியா பசிபிக் வர்த்தக உடன்படிக்கைக்கு இணங்கிய உடன்படிக்கை நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யும் 3,142 பொருட்களின் மீது கட்டண சலுகைகளை மத்திய அரசு  நடைமுறைப்படுத்தியுள்ளது.

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு மின்னணு முறையில் சேமிக்கப்படும்

  • 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படவுள்ள தரவு மின்னணு முறையில் சேமிக்கப்படுவது இது முதல் முறையாகும்.

மாநாடுகள்

“உடல் குறைபாடு உள்ளவர்களுக்கான திறன் மேம்பாடு குறித்த தேசிய பயிலரங்கு”

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், உடல் குறைபாடு உள்ள நபர்களுக்கு அதிகாரமளித்தல் துறை, உடல் குறைபாடு உள்ளவர்களுக்கான திறன் மேம்பாடு குறித்த தேசிய பயிலரங்கிற்கு புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்தது.

நியமனங்கள்

  • சரஸ்வதி பிரசாத் – ஸ்டீல் ஆதாரிட்டி ஆப் இந்தியா (SAIL) சி.எம்.டி.

புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மிசோரமிற்கு ப்ரூ நபர்கள் இடம்பெயர ஒப்பந்தம் கையெழுத்தானது

  • இந்திய அரசு, மிசோரம் மற்றும் திரிபுரா அரசாங்கங்கள் மற்றும் மிசோரம் ப்ரூ இடம்பெயர்ந்த மக்கள் மன்றம் (MBDPF) 1997 ஆம் ஆண்டு முதல் மிசோரமில் இருந்து இடம்பெயர்ந்த ப்ரூ நபர்களை மறு குடிஅமர்த்துதல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாதுகாப்பு செய்திகள்

கார்கில் வெற்றி நாளையொட்டி இந்திய ராணுவம் நடத்திய இருசக்கர வாகன சிறப்பு பயணம்

  • 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் இந்திய ராணுவம் கண்ட வெற்றியை குறிக்கும் வகையில் ராணுவ காவல்படையின் இருசக்கர வாகன குழுவான “ஸ்வேத் அஷ்வ்” நடத்திய சிறப்பு பயணம் பெங்களூரில் நேற்று கொடியசைத்து பெங்களூரில் துவக்கிவைக்கப்பட்டது.

விருதுகள்

  • மகாராஷ்டிராவின் பால்கார் மீனவர் மிலன் ஷங்கர் தரே – தேசிய கடல்வளம் தேடல் மற்றும் மீட்பு விருது.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

“cVIGIL”

  • தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய “cVIGIL” என்னும் செல்போன் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

விளையாட்டு செய்திகள்

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 172 ரன்கள் குவித்து சாதனை

  • ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 172 ரன்கள் குவித்து, தனது முந்தைய உலக சாதனையை முறியடித்தார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!