ஜூலை 26 TNUSRB காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு – முன்னேற்பாடுகள் தீவிரம்!

0
ஜூலை 26 TNUSRB காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு - முன்னேற்பாடுகள் தீவிரம்!
ஜூலை 26 TNUSRB காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு - முன்னேற்பாடுகள் தீவிரம்!
ஜூலை 26 TNUSRB காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு – முன்னேற்பாடுகள் தீவிரம்!

TNUSRB 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் வரும் ஜூலை 26ம் தேதி நடைபெறவுள்ளது. அதனால் மைதானத்தில் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உடற்தகுதித் தேர்வு:

தமிழகத்தில் காவலர், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் போன்றவர்கள் அரசு பணிகளுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் உடற்கூறு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் 2,748 ஆண்களும், 1,045 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றனர். அடுத்த கட்டமாக கடந்த மாதம் ஏப்ரல் 21ம் தேதி உடற்தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் முடிவு செய்தது.

தமிழக அரசு மருந்தாளுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – பாமக தலைவர் வரவேற்பு!

ஆனால் இதற்கிடையில் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்த காரணத்தால் முடிவு செய்யப்பட்ட தேதியில் உடற்தகுதித் தேர்வு நடத்த இயலவில்லை. மேலும் தேதி குறிப்பிடப்படாமல் உடற்தகுதி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பூசிகள் பயன்பாடு மற்றும் தொடர் ஊரடங்கின் காரணமாக தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஒத்திவைக்கப்பட்ட 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு ஜூலை 26ம் தேதி நடத்தப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் உடற்தகுதித் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. உடற்தகுதி தேர்வில் இளைஞர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக, கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here