ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 16 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 16 2018

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

  • ஜூலை 16 – உலக பாம்பு தினம்
  • இந்தியாவின் வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் (ஐ.சி.ஏ.ஆர்.) 90 வது ஆண்டு விழாவில் வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் வாழ்த்து தெரிவித்து விருதுகளை வழங்கினார்.
  • அனைத்து குழந்தை பராமரிப்பு நிறுவனங்களும் ஒரு மாதத்திற்குள் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்திடம் (CARA) இணைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.
  • ரயில்வே, நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியுஷ் கோயல் வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (WCL) சுரங்கங்களில் இருந்து நிலக்கரித் துறைக்கு நிலக்கரி போக்குவரத்துக்காக மஹாஜென்கோ (MAHAGENCO) பைப் கன்வேயர் சிஸ்டத்தைத் திறந்துவைத்தார்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் ஐஸ்லாந்தை உலகின் 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் கவுன்சில் இருக்கைக்கு ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர்.
  • விண்ணப்பதாரர்களுக்கான காத்திருக்கும் நேரத்தை குறைக்க இந்தியா தனது மிகப்பெரிய விசா மையத்தை வங்காளதேச தலைநகரான டாக்காவில் தொடங்கியது.
  • பிளிப்கார்ட்டின் டிஜிட்டல் செலுத்துதல் தொடக்கம் போன் பே ஆனது சாப்பேர் சில்லறை நிறுவனத்தை வாங்கியது.
  • பிரதமர் திரு.நரேந்திர மோடி புதுதில்லியில் Y4D நியூ இந்தியா கூட்டமைப்பில் உரையாற்றினார்.
  • ஆயுஸ் அமைச்சகத்தின் கீழ் அனைத்து இந்திய ஆயுர்வேத இன்ஸ்டிடியூட் (AIIA), இந்தியா சர்வதேச மையம், புதுடில்லியில் ஜூலை 17, 18ஆம் தேதிகளில் ஆயுஷ் தேசிய நிறுவனங்களின் தலைவர்களின் இரண்டு நாள் மாநாடு நடக்கிறது.
  • இந்தியா-ஓமன் கூட்டு ஆணையத்தின் (JCM) 8வது அமர்வு கூட்டத்தில், வர்த்தக, கைத்தொழில் மற்றும் விமானத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூட்டுத் தலைமை தாங்கினார்.
  • ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான “ஆங்கிலம் எனக்கு பயம் இல்லை” திட்டத்தை ஹரியானா தொடங்கியது.
  • மத்திய அரசின் இந்தியா பிபிஓ ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ விரைவில் மைசூரில் தனது பிபிஓ நடவடிக்கைகளை தொடங்கவுள்ளது .
  • நாக்பூரில் மாஸ் ரேபிட் ட்ரான்ஸிட் சிஸ்டத்தை (MRTS) அறிமுகப்படுத்த Mahametro உடன் இந்திய இரயில்வே ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
  • பலசோர் ஒரிசாவில் உள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சில் (ஐ.டி.ஆர்) இருந்து பிரமோஸ் சூப்பர்சோனிக் க்ரூயிஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
  • வைஸ் அட்மிரல் ஐபக்-எட்டே ஏக்வெ இபஸ், நைஜீரிய கடற்படைத் தளபதி, நைஜீரிய கடற்படைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும் 2018 ஆம் ஆண்டு 16 முதல் 19 ஜூலை வரை இந்தியாவுக்கு வருகை தருகிறார்கள்.
  • புதிதாக மேம்படுத்தப்பட்ட CIC இருமொழி மொபைல் செயலி பதிப்பை மத்திய தகவல் ஆணையம் (CIC) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் 4-1 என்ற கணக்கில் குரோஷியாவை வென்றது.
  • முன்னால் சாம்பியன் சஹாஜ் க்ரோவர் தென்னாப்பிரிக்கா ஓபன் செஸ் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!