ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 12 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 12 2018

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூலை 12 – சர்வதேச மலலா தினம்

  • புது தில்லியில் இந்திய தொல்லியல் ஆய்வு மையம் (ASI) புதிய தலைமையகம் கட்டடம் – தாரோகர் பவனை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
  • முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம், மதுபானங்கள் அருந்தினால் வீடு, நிலம் மற்றும் வாகனம் உட்பட சொத்துக்களை பறிமுதல் செய்யும் கடுமையான விதிகளை ரத்து செய்ய ஒப்புதல் அளித்தது.
  • ஜூலை 23ம் தேதி நாட்டிற்கான இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அண்ட் கன்ஸ்ட்ரக்சனை (IIIC) முதலமைச்சர் பினராயி விஜயன் கேரளாவிலுள்ள சவாராவில் திறந்து வைப்பார்.
  • முதல் முறையாக, ஒடிசாவில் பார்வை குறைபாடுள்ள நிர்வாக அதிகாரிகளுக்கு தேவைப்படும் அனைத்து சட்ட புத்தகங்களும் ப்ரெய்லி வடிவில் அச்சிடப்பட்டு வருகின்றன.
  • யுனெஸ்கோவின் கீழ் உக்ரைன் மற்றும் போலந்தில் நடைபெற்ற பிரேவ் கிட்ஸ் சர்வதேச விழாவில் “குழந்தைகள் மற்றும் அவர்களது நண்பர்கள் சர்வதேச இயக்கத்தில்” இந்திய மாணவர்கள் நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
  • புதிய நேட்டோ பயிற்சி கமேண்ட் மற்றும் ஈராக்கில் திறனை மேம்படுத்தும் பணியையும் கனடா ஏற்றுக்கொள்கிறது.

உலக வங்கியின் 2017 தரவரிசையில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது

1) அமெரிக்க 2) சீனா 3) ஜப்பான் 4) ஜெர்மனி 5) இங்கிலாந்து 6) இந்தியா

  • MGNREGA மற்றும் வேளாண்மைக்கு இடையே ஒருங்கிணைப்பு தொடர்பாக முதல் அமைச்சர்களின் துணை குழுவின் முதல் கூட்டம நிதி ஆயோக்கில் நடைபெற்றது.
  • புதுடில்லி விஞ்யான் பவனில் நடைபெற்ற 164 வது மத்திய பொதுப்பணித் துறை தினம் (CPWD) கொண்டாட்டத்தில் சுற்றுலா துறை அமைச்சர் உரையாற்றினார்.
  • டாக்டர் டி.சி.ஏ. ராகவன் – டைரக்டர் ஜெனரல், முன்னாள் கவுன்சில் அலுவலக உறுப்பினர், உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சில் (ICWA).
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு பொருத்தமான முறைகளை ஊக்குவிக்கவும் அதற்கான தீர்வுகளை அடையாளம் காண்பதற்கும் ஒரு தொழில்நுட்ப சவால் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மின்சார இழப்பை குறைப்பதற்கு மகாராஷ்டிரா அரசாங்கம் “விவசாயிக்கு ஒரு மின்மாற்றி” ஒதுக்கீடு செய்வதற்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும்.
  • 2018 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பாதுகாப்புபடை சம்பள தொகுப்புக்காக இந்திய இராணுவம் மற்றும் எஸ்.பி.. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • அண்டை நாடுகளிலிருந்து வரும் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள் எளிதாக்க வேண்டி வங்கதேசத்துடன் இந்தியா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டம்.
  • முதன்முதலாக இந்திய கப்பல் INS சுமித்ரா மலாக்கா நீரிணைக்கு அருகே சபாங் துறைமுகத்தில் செயல்பட்டது.

ரயில் பவனில் அழகுபடுத்தல் போட்டி

  • பால்ஹர்ஷா & சந்திராபூர் (மத்திய ரயில்வே)
  • மதுபாணி (கிழக்கு மத்திய ரயில்வே) மற்றும் மதுரை (தெற்கு ரயில்வே)
  • காந்திதம் (மேற்கு ரயில்வே), கோட்டா (மேற்கு மத்திய இரயில்வே) மற்றும் செகன்ட்ராபாத் (தெற்கு மத்திய ரயில்வே)
  • ஜூலை 15ம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் குரோஷியாவை எதிர்கொள்ளும்.
  • பின்லாந்தில் நடைபெறும் 20 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று, ஒரு சரித்திர சாதனையைப் படைத்திருக்கிறார் அஸ்ஸாமைச் சேர்ந்த ஹிமாதாஸ்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!