பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜூலி? முதல் வார எலிமினேஷன்! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜூலி? முதல் வார எலிமினேஷன்! ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜூலி? முதல் வார எலிமினேஷன்! ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜூலி? முதல் வார எலிமினேஷன்! ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் வாரத்திற்கான எலிமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், மொத்தம் 8 பேர் உள்ள நிலையில், டேஞ்சர் லிஸ்டில் 3 பேரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

எலிமினேஷன் பட்டியல்:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றி மற்றும் அதன் வரவேற்பை தொடர்ந்து மக்கள் நிகழ்ச்சியினை பற்றி முழுவதுமாக மக்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி OTT தளத்தில் ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. 24 மணி நேரமும் நிகழ்ச்சி OTT தளத்தில் வரும். அதை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், முக்கியமான விஷயமாக இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் இதில் கலந்து கொள்கிறார்கள்.

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் புகழ் என்ட்ரி எப்போது? வித்யூலேகா சொன்ன விளக்கம்!

மொத்தம் 14போட்டியாளர்கள் அல்டிமேட் நிகழ்ச்சியில் வந்துள்ளார்கள். 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்படுவதால் அதிக ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், நினைத்த அளவிற்கு மக்களின் கவனத்தை பெற தவறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த முறை முதல் வாரத்திலேயே 8 பேர் எவிக்ஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அதில், நிரூப் அதிக வாக்குகளான 26% ஐ பெற்று முதல் இடத்தில் பாதுகாப்பாக உள்ளார். 2ம் இடத்தில் அனிதா சம்பத், 3ம் இடத்தில் சுருதி, 4ம் இடத்தில் சினேகன் மற்றும் 5ம் இடத்தில் அபிநய் உள்ளனர்.

ஆனால் மிகவும் டேஞ்சர் பட்டியலில் 3 பேரின் பெயர் நீடிக்கிறது. அதில், சுரேஷ் சக்கரவர்த்தி 8.27% வாக்குகளும், வனிதா 7.51% வாக்குகளும், ஜூலி 6.28% வாக்குகளும் பெற்று கடைசி இடத்தில் உள்ளனர். அதில், முதல் சீசனில் இருந்து ஜூலி மோசமான விமர்சங்களை பெற்று வந்ததால் முதல் வாரத்தில் ஜூலி தான் வெளியேற உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கமல் இது முதல் வரம் என்பதால் எவிக்சனும் இல்லை என்று கூற வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!