‘பிக் பாஸ்’ ஜூலியை ஏமாற்றிய காதலன் – நடந்தது என்ன? ஷாக் ரிப்போர்ட்!

0
'பிக் பாஸ்' ஜூலியை ஏமாற்றிய காதலன் - நடந்தது என்ன? ஷாக் ரிப்போர்ட்!
'பிக் பாஸ்' ஜூலியை ஏமாற்றிய காதலன் - நடந்தது என்ன? ஷாக் ரிப்போர்ட்!
‘பிக் பாஸ்’ ஜூலியை ஏமாற்றிய காதலன் – நடந்தது என்ன? ஷாக் ரிப்போர்ட்!

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகியவர் ஜுலி. இவர் தற்போது சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் குறித்து அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

போலி புகார்:

சென்னையில் சில வருடங்களுக்கு முன்னதாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனித்து தெரியப்பட்ட மக்களில் ஜுலியும் ஒருவர். இவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு எதிராகவும் முழங்கிய கோஷங்கள் அனைத்தும் அனைவராலும் கவனிக்கப்பட்டது. அந்த போராட்டம் வெற்றி அடைந்து, அதன் மூலம் கிடைத்த புகழின் அடிப்படையில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் இந்த நிகழ்ச்சியிலும், கருத்துக்களை மாற்றி, மாற்றி கூறி நடித்து வந்தது அனைவரும் நன்கு அறிந்த கதை. அதன்பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்த பிறகு, பல வாய்ப்புக்களை பெற்றுள்ளார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து மீண்டும் வெளியேறிய அபிஷேக் – ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில், ஜுலி சென்னை அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் தனது கே காதலர் மனீஷ் என்பவர் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், அழகு நிலையத்துக்கு சென்ற போது மேனேஜர் மனிஷுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த 2017ம் ஆண்டு முதல் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து, ஜோலியிடம் இருந்து மனீஷ் இருசக்கர வாகனம், 2 சவரன் தங்க செயின், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்து ரூ. 2.50 லட்சம் வரை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் மனீஷ் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில்,காவல் துறையினர் மனீஷை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலிக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் பிரச்சனை எழுந்தபோது, மனிஷ் என்பவர் ஜூலிக்கு ஆறுதல் கூற பின்னர் ஜூலிக்கும் மனிஷூக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது. தற்போது ஜுலிக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, உள்ளதால் மனீஷின் காதலை தவிர்த்துள்ளார். ஜுலியின் மாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மணீஷ் ஜுலிக்கு கால் செய்து நீ இல்லாமல் வாழ முடியாது என்று கூறி அழுதுள்ளார். இதனால் மனீஷை மிரட்டுவதற்காக காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

இந்நிலையில், மனீஷ் தானாகவே ஜுலி வாங்கி கொடுத்த தங்க நகை, ஃபிரிட்ஜ் மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றை காவல் துறையினர் முன்னிலையில் திருப்பி அளித்துள்ளார். காதலர் தன்னை ஏமாற்றியதாக கூறிய புகார் அளித்த நிலையில், ஜுலி தான் காதலரை ஏமாற்றி இருப்பது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here