திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜூலி – அதிர்ச்சியில் ரசிகர்கள்! அவரே வெளியிட்ட பதிவு!

0

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜூலி – அதிர்ச்சியில் ரசிகர்கள்! அவரே வெளியிட்ட பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்களை சம்பாதித்த ஜூலி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது போன்றும் அவருக்கு ஆபரேஷன் நடைபெற்றது போன்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கான காரணத்தை ஜூலி அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனையில் ஜூலி

மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பியவர் தான் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுக்க தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தார். இதன் மூலமாக ஜூலிக்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டமும் உருவாகின. இதற்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜூலிக்கு வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 1 ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலிக்கு நினைத்தபடி நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. அதாவது ரசிகர்களின் வெறுப்பை மட்டுமே சம்பாதித்து பாதியிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து கிளம்பினார். பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் கூட ஜூலியை வைத்து ரசிகர்கள் வறுத்தெடுத்து கொண்டிருந்தனர்.

TET தேர்வு ‘இந்த’ பள்ளி ஆசிரியர்களுக்கு செல்லாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதனால் பல மாதக்கணக்கில் சமூக வலை பக்கங்கள் முன்புகூட தலைகாட்டாமல் ஜூலியும் மறைமுகமாக இருந்து வந்தார். சில மாதங்களுக்குப் பிறகு வழக்கம்போல ஜூலி சமூக வலைப் பக்கங்களில் உலாவ ஆரம்பித்துவிட்டார். இதற்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். சீசன் 1 போல அல்லாமல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னுடைய உண்மையான முகத்தை நீங்கள் பார்ப்பீர்கள். 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதால் மட்டுமே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் எனக் கூறி வந்தார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் மூலமாகவாவது ஜூலி ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆவாரா என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதிலும் வழக்கம் போல ரசிகர்களின் வெறுப்பை மட்டுமே சம்பாதித்து பாதி நாட்களிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் ஜூலி கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் ஜூலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆபரேஷன் நடந்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என கேட்டபடி இருந்த நிலையில் ஜூலி அதற்கு தகுந்த விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஜூலி அவரது கண்ணில் ஆபரேஷன் செய்துள்ளதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் என்னை விசாரித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி எனவும் கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!