IPL 2022: ஏலத்தில் மீண்டும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் – ரசிகர்கள் உற்சாகம்!

0
IPL 2022: ஏலத்தில் மீண்டும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் - ரசிகர்கள் உற்சாகம்!
IPL 2022: ஏலத்தில் மீண்டும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் - ரசிகர்கள் உற்சாகம்!
IPL 2022: ஏலத்தில் மீண்டும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் – ரசிகர்கள் உற்சாகம்!

IPL ஏலம் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முன் இங்கிலாந்து வீரர்களாகிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ரூட், ஸ்டார்க் ஆகியோர் இந்த ஆண்டுக்கான IPL மெகா ஏலத்தில் விருப்பம் தெரிவிக்காமல் இருந்த நிலையில் இன்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ECB ஆர்ச்சர் பெயரை அடுத்த ஆண்டு IPL ஏலத்தில் கண்டிப்பாக பதிவு செய்வோம் என்று அறிவித்துள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்:

ஐபிஎல் மெகா ஏலம் வருகிற இம்மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு IPL யில் மொத்தம் 1214 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். இதில் ஆப்கானிஸ்தான் 20 ,பூட்டான் 1,ஆஸ்திரேலிய 59, நமீபியா 5, பங்களாதேஷ் 9, நேபாளம் 15, இங்கிலாந்து 3 ,நெதர்லாந்து 1,அயர்லாந்து 3, ஓமன் 3, நியூசிலாந்து 29, ஸ்காட்லாந்து 1, தென்னாப்பிரிக்கா 48, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 1, இலங்கை 36 ,அமெரிக்கா 14 , மேற்கிந்திய தீவுகள் 41 ,ஜிம்பாப்வே 2 நேநா மொத்தம் 318 வெளிநாட்டு வீரர்கள் தங்களது பெயரை ஏலத்தில் பதிவிட்டுள்ளார்கள். மேலும் இதில் பல இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களும் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் DA நிலுவைத்தொகை? 2022 பட்ஜெட்டிற்கு பின் அறிவிப்பு!

இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. BCCI அறிவிப்பின்படி இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜாஸ் பட்லர் (10 கோடி), யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி) ஆகியோரை மட்டுமே தக்கவைத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரில் ஒருவரை தக்க வைக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக எழுந்த நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைக்கும் விதமாக சமீபத்தில் BCCI முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ரூட், ஸ்டார்க் ஆகியோர் இந்த ஆண்டுக்கான IPL மெகா ஏலத்தில் விருப்பம் தெரிவிக்காததால் அவர்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக BCCI தெரிவித்துள்ளது.

இரவு ஊரடங்கு ரத்து, 100% ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் அணியில் இடம் பெறாமல் உள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 2023 IPL தொடரில் விளையாடுவேன் என்று அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் கண்டிப்பாக ஆர்ச்சர் பெயரை பதிவு செய்வோம் இன்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ECB உறுதியாக கூறியுள்ளது. ஆர்ச்சர் பெயரை IPL ஏலத்தில் தனது பெயரை அடிப்படை விலையான 2 கோடிக்கு பதிவு செய்வதாக தெரிவித்துள்ளது . இதனால் 2023 ஆம் ஆண்டு IPL ஏலத்தில் 10 அணிகளும் ஆர்ச்சரை எடுக்க போட்டி போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!