இந்த பென்ஷன் திட்டத்தில் சேருங்கள்.. ரூ.210 முதலீட்டில் மாதம் ரூ.5,000 கிடைக்கும் – முழு விவரம் இதோ!

0
இந்த பென்ஷன் திட்டத்தில் சேருங்கள்.. ரூ.210 முதலீட்டில் மாதம் ரூ.5,000 கிடைக்கும் - முழு விவரம் இதோ!
இந்த பென்ஷன் திட்டத்தில் சேருங்கள்.. ரூ.210 முதலீட்டில் மாதம் ரூ.5,000 கிடைக்கும் - முழு விவரம் இதோ!
இந்த பென்ஷன் திட்டத்தில் சேருங்கள்.. ரூ.210 முதலீட்டில் மாதம் ரூ.5,000 கிடைக்கும் – முழு விவரம் இதோ!

அடல் பென்ஷன் யோஜனா ஓய்வூதிய திட்டத்தில் பயனர்கள் நிலையான குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ 1000 முதல் அதிகபட்சமாக ரூ.5,000 வரை பெறலாம். இந்த திட்டம் குறித்த முக்கிய தகவல்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய திட்டம்:

அடல் பென்ஷன் யோஜனா (APY) என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நடத்தப்படும் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். அமைப்புசாரா துறையில் இருப்பவர்கள் வயதாகும்போது அவர்களுக்கு வருமான நிலைத்தன்மையை வழங்குவதற்காக 2015-16 பட்ஜெட்டில் இந்த ஓய்வூதியத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ள மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் எவரும் APY இல் முதலீடு செய்யத் தகுதியுடையவர்கள் ஆவர்.

இந்த ஓய்வூதியத் திட்டம் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) கட்டமைப்பின் மூலம் PFRDA ஆல் நிர்வகிக்கப்படுகிறது. பயனர்கள் தங்கள் 60 வயது முதல் மாதம் நிலையான ஓய்வூதிய தொகையாக தங்கள் முதலீட்டிற்கு ஏற்ற அளவு பெறுவார்கள். APY இன் கீழ் சந்தாதாரரின் குறைந்தபட்ச பங்களிப்பு காலம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும். 18 வயது முதலீட்டாளர் ஓய்வுக்குப் பிறகு ரூ. 5,000 மாதாந்திர ஓய்வூதியத்தை பெற விரும்பினால் அவர் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.210 டெபாசிட் செய்ய வேண்டும்.

பள்ளிகளில் இந்த வகுப்பு இனி கட்டாயம்.. மாணவர்களுக்கு அப்போ ஜாலி தான் – அரசின் புதிய திட்டம்!

Exams Daily Mobile App Download

PFRDA ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 39 வயதுக்குட்பட்ட திருமணமான தம்பதிகள் திட்டத்திற்கு தனித்தனியாக விண்ணப்பிக்கலாம். இந்த ஜோடி 60 வயதை எட்டிய பிறகு, அவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். 30 வயதிற்குட்பட்ட கணவன் மற்றும் மனைவி ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட APY கணக்குகளுக்கு மாதாந்திர பங்களிப்பாக ரூ.577 செலுத்தலாம். வருமான வரிச் சட்ட பிரிவு 80CCD(1b) இன் கீழ் இந்த திட்டத்தில் வருமான வரிச் சலுகைகளைப் பெறலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!