தமிழக கல்வித் துறையில் ரூ.32,000 முதல் ரூ.45,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!

0
தமிழக கல்வித் துறையில் ரூ.32,000 முதல் ரூ.45,000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!
தமிழக கல்வித் துறையில் ரூ.32,000 முதல் ரூ.45,000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!
தமிழக கல்வித் துறையில் ரூ.32,000 முதல் ரூ.45,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு வகையான திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இத்திட்டங்களுக்கு உதவி புரியும் வகையில் இளைஞர்களை நியமிக்க தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்து அரசுடன் பணிபுரிய தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கவும் அத்துடன் பள்ளிக் கல்வியை மேம்படுத்தவும் பல்வேறு வகையான திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், என் பள்ளி என் பெருமை உள்ளிட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு கல்வி ஊக்கத்தொகை திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை மேலும் மேம்படுத்த இளைஞர்களை நியமிக்க உள்ளதாக அரசு முடிவு செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

இத்திட்டத்துடன் இணைந்து அரசுடன் பணி புரிய விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் Senior Fellows, Fellows பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இளங்கலை (அல்லது) முதுகலை பட்டம் பெற்றதுடன் குறைந்தபட்சமாக 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் இப்பணியிடத்தில் சேரும் பணியாளர்களுக்கு மாத சம்பளமாக முறையே ரூ. 45,000 மற்றும் ரூ. 32,000 வழங்கப்படுகிறது. மேலும் இப்பணியிடத்தில் விண்ணப்பிக்க சமூக ஊடங்களைப் பயன்படுத்த தெரிந்தவராக இருக்க வேண்டும்.

இந்த பணியிடத்தில் ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை பணிபுரிய வேண்டும்.  இந்த பணிக்காலத்தில் தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் பணிக்காலம் முழுவதையும் முடிப்பவர்களுக்கு அரசு சார்பில் அனுபவ சான்றிதழ் வழங்கப்படுகிறது.  இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து ஜூன் 15க்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும்.  மேலும் இது தொடர்பான விவரங்கள் பெற https://tnschools.gov.in/wp-content/uploads/2022/04/TN-Education-Fellowship-English-Apr-2022.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!