தமிழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் உள்ள பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இந்து அறநிலையத்துறையின் கீழ் ஏராளமான கோவில்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த கோவில்களில் உள்ள அலுவலக பணியாளர்கள் இந்து அறநிலையத்துறையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதன்படி தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் நல்ல உடல்நலத் தகுதி, மிதிவண்டி ஓட்ட தெரிந்தவாராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதார் இந்து மதத்தை சார்ந்தவராகவும் அத்துடன் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருப்பது கட்டாயமாகும். இதில் தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். இதில் நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு ரூ.15700 முதல் ரூ. 50000 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜூன் 15 வரை கால அவகாசம் – eKYC செயல்முறை குறித்த முக்கிய அறிவிப்பு!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து இதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வருகிற 30ம் தேதி அன்று மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.  அத்துடன் இந்த விண்ணப்ப படிவத்தை உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, க.எண்.1/304-4, 3 ஆவது குறுக்குத் தெரு, இராஜாஜி நகர், இராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி – 635 002 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.  மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற    04343 291128 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!